ஏகாந்தம் இனிது உன்னோடு 1-5

ஏகாந்தம் இனிது உன்னோடு 1-5

ஏகாந்தம் இனிது உன்னோடு!

                  அத்தியாயம் - 1

தீஞ்சுவையிலும்

சிறு கசப்பு நீ!

கடும்விஷத்திலும்

சிறு மதுரம் நீ!

கண்ணாடியில் தன்னுடைய உருவத்தை பார்த்துக்கொண்டே சேலைய கட்டிமுடித்து தன்னுடைய ஸ்டெப்கட்டிங் செய்த முடியை சின்னதொரு கிளிப்பில் அடக்கிவிட்டு ரூம்லயிருந்து வெளிய வந்தாள் அனிஷா.. அந்த அலை அலையாக  

முடி இடை வரை , அதுவும் அழகாக வெட்டப்பட்டு அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

" அனிஷா ஐந்தரை அடி உயரம். ஜீரோ சைஸ்லாம் அவயில்ல, கொஞ்சம் சதைபற்றான அம்சமான உடல்வாகு உடையவள். அவளின் உயரத்திற்கு அதுவும் நளினமாக இருக்கும்

முதுகலை புனே நகரத்தில் முடித்து அங்கயே புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள்.

மாநிறத்தைவிட சற்றே கூடுதலான நிறம். பாக்குறவங்களுக்கு கண்டிப்பா ஒருதடையாவது அவ கன்னத்தை தொடமாட்டமா என ஏங்குறளவுக்கான மெத்தென்ற கன்னம். மொத்தத்தில் நம்ம ஊரு அழகி அவள்.

அவ உடுத்திருக்க அந்த நேவிப்ளூ சில்க்காட்டன் அவ கலர இன்னும் தூக்கி காட்டினது.

எப்பவுமே சாரீஸ் எடுத்தா அடர் நிறங்களைத்தான் தேர்ந்தெடுப்பா.

வேலைசெய்யுற கல்லூரியில் எந்தவிதமான உடைகளும் அணியலாம். ஊருக்கு வந்தாமட்டும் அம்மாவுக்காக சேலைகட்டுறது.

ஜீன்ஸ் டாப்ஸ் போட்டா வேப்பிலையில்லாமலே சாராதம்மா சாமியாடிருவாங்க. அவங்களுக்கு பெண்பிள்ளைகள் இப்படித்தான் உடை உடுத்தனும் என வரைமுறை உள்ளவங்க.

அனிஷாவோட அம்மா சாரதா " ஏன் இவ்வளவு சீக்கிரமா போற பங்க்க்ஷன் சாயங்காலம் தான.

தம்பி கார்ல கூட்டிட்டு போறதா சொன்னாம்ல. இப்பம்பாரு பஸ்ல அடிச்சிபிடிச்சிபோவியா நீ "

அனிஷா " இல்லம்மா போய்விடுவேன் ஜஸ்ட் கிஃப்ட மட்டும் கொடுத்துட்டு வந்திடுவேன்மா. அதுக்காக அவனையும் கூட்டிட்டு போய் ஏன் அலைக்கனும்.

அவனுக்கும் வேலையிருக்கும் எல்லாத்துக்கும் அவனை தொந்தரவு பண்றமாதிரி இருக்கும். சரி நான் கிளம்புறேன்"

ஹால்ல இருந்த அவங்கப்பா ஜெயராஜ்கிட்ட வந்து போயிட்டு வர்றேன்பா என சொல்லிட்டு வெளிய இறங்கிட்டா.

அனிஷா அப்பா செல்லம். என்ன கேட்டாலும் அவரு வாங்கி குடுத்திருவாரு.

இவரோட பாசத்தின் அதிக நிலைதான் இப்பவும் சில தீர்மானம் அவளா எடுத்திட்டு பிடிவாதமாயிருக்கா.

" வெளிய போறவள பார்த்திக்கிட்டே இருந்திட்டு 28 வயசு முடியப்போகுது இன்னும் கல்யாண விசயம் பேசினாமட்டும் கோவம் வந்திரும் என்ன பண்ணப்போறனோனு " தன்னபோல புலம்பிக்கிட்டே கிட்சன் வேலைய செய்திட்டுருந்தார்

அதகேட்டும் கேட்காத மாதிரியே வெளிய கிளம்பிட்டாங்க அனிஷாவின் அப்பா ஜெயராஜ்.

ஏன்னா அனிஷாக்கு எல்லா விஷயத்துலயும் சப்போர்ட் பண்றது அவருதான். இன்னும் கொஞ்சநேரம் இங்க இருந்தா அடுத்த தாக்குதல் அவருக்குத்தான்

(மனுஷன் தப்பிச்சிட்டாரு இன்னைக்கு).

பஸ்ஸின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவளின் நினைவுகள் ஒரு நிமிடம் எங்கெங்கோ சென்றுவந்தது. தன் தலையை துலுக்கி, நினைவுகளை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தாள்.

தான்போகும் இடத்திற்கான டிக்கட் xxx காலேஜ் என்று எடுக்கும்போதே சந்தோஷம் அவள் முகத்திலும் ,உதட்டின் முறுவலிலும் தெரிந்தது.

பஸ் நாகர்கோவில் தாண்டி மேற்கு நோக்கி செல்லும்போது இதமான குளிர்ந்த காற்று முகத்தில் மோதும்போது அவ்வளவு புத்துணர்ச்சி.

அந்த மாவட்டத்திற்கே உண்டான சீதோஷன நிலையிது. எப்பவுமே அதிக வெயிலுமில்லாமல் அதிக மழையுமில்லாமல் ஒரு காலநிலை அங்கயிருக்கும் அதுவே அங்கு வாழும் பெண்களுக்கு ஒரு தனி அழகைகொடுக்கும்.

வெளியே பார்த்து, ரசித்துக்கொண்டே ஏழு வருஷத்துல எவ்வளவு மாற்றம் நிறைய கட்டிடங்கள் ,வீடுகள், கடைகள் அடையாளமே தெரியல.

இங்கயே இப்படியிருக்கே காலேஜ் பக்கத்துல எவ்வளவு மாற்றமோ என எண்ணிக்கொண்டாள்.

அப்போதெல்லாம் நான்கு வருசம் தினசரியான பயணம் இந்த பஸ்லதான். எவ்வளவு அழகான நாட்கள் , அது கோல்டன் டேய்ஸ்.

திடீரென அவளின் மனதுக்குள் சஞ்சலமும் தவிப்பும். அடுத்த ஸ்டாப்ல இறங்கி வீட்டுக்கு திரும்பி போயிடுவோமா அப்படினு யோசிக்கும்போதே அவளுடைய நண்பனின் முகம் வந்துபோச்சி..

இன்னைக்கு மட்டும் போகல கோவத்துல பேசியேக்கொன்றுவான். அவளின் நண்பன் சந்துரு. அனிஷாவின் கல்லூரிக்காலத்தில் தொடங்கி இன்றுவரைக்கும் தொடரும் நட்பு . அவளின் நல்லதுகெட்டது என்று அறிந்தவர்களில் அவனும் ஒருவன்.

முதுகலை முடித்து வெளிநாட்டில் வேலைபார்க்கும் அவன் இப்பொழுதுதான் மனைவி மகனுடன், மகனின் ஒருவயது பிறந்தநாள் விழாவிற்காக வந்திருக்கிறான்.

அவனுடைய திருமணத்திற்குகூட வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்தாச்சி. பிள்ளையவாது பார்க்கனும்.

ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே பிறந்தநாள் பத்திரிக்கையும் அனுப்பி வரனும்னு சொல்லிட்டான்

ஏற்கனவே அவனுக்கு தகவல் அங்க வர்றேனு சொல்லியாச்சு இனி போகமலும் இருக்கமுடியாது என்ன செய்ய..

அரைமணி நேரப்பயணம் மனதிற்குள் பழைய நினைவுகள் அடிக்கடி வந்து முட்டுது எல்லாம் கடந்துதான் வரனும் வேறவழியில்ல.

பேருந்திலிருந்து இறங்கி சந்துரு வீடிருந்த பக்கமா நடக்க தொடங்கும்போதே அங்க அவளுக்கு எதிரே நின்றிருந்தவனை பார்த்ததும் சந்தோஷம் .

அனிஷாவை பார்த்தவுடனே பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தவனை விட்டுட்டு வந்தவன்.

சந்துரு" பாதியில இறங்கி திரும்பிபோய்டுவியோன்னுல நினைச்சேன் பரவாயில்லையே. அம்மையாரு மனசுவச்சி இங்கவரைக்கும் வந்திட்ட "

அனிஷா " அப்படித்தாண்டா நினைச்சேன் உனக்காக எங்க வந்தேன் குட்டிப்பையனுக்காக வந்தேன். எதாவது சொன்ன அப்படியே திரும்பி போயிடுவேன் "

சந்துரு " அதானே நீ யாரு உன்கிட்டலாம் பேசமுடியுமா..

வா வீட்டுக்குபோகலாம் ”

அனிஷா " அது யாரு உன்கிட்ட பேசிட்டுயிருந்தது. எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு "

சந்துரு " உனக்கு அவனை அடையாளந்தெரியலயா..எல்லாம் மெக்கானிக் டிபார்ட்மன்ட் ரமேஷ்தான்.. உன்கிட்ட அடிவாங்கம தப்பினதுல இவனும் ஒருத்தன் காலேஜ் எலக்க்ஷன் டைம்ல, மறந்திட்டியா "

அனிஷா " ஞாபகமில்ல ..நம்மகிட்ட வாங்கிகட்டினவங்க லிஸ்ட் பெரிசுல ..

எங்க ஞாபகமிருக்கு ."

" எங்கடா அவன காணோம் " இவ்வளவு நேரத்துல எஸ்கேப்பாகிட்டானா .

ஹா ஹா..

ரெம்ப நாளுக்கப்பறமா மனசுவிட்டு சிரிச்சிட்டா இந்த இடங்கள் தந்த ஞாபகம் வலியையும் கொஞ்சம் அவளுக்கு தந்தது.

அவங்க நின்ற இடத்திலிருந்து வலப்பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்துபோனால் அவங்க படிச்ச காலேஜ் வரும் கூடவே யாரை வாழ்நாள்ல பார்க்கமா இருக்கனும்னு இவ்வளவு பிடிவாதமா இருக்காளோ அவனோட ஊரும் அந்தபக்கந்தான்.

அனிஷாவும் சந்துருவும் வீடு நோக்கி நடக்கத்தொடங்கவும்.

ரமேஷ் பக்கத்திலிருந்த கடைக்குள்ளிருந்து வெளியே வந்து அவங்க இரண்டுபேரும் கொஞ்சம் தூரமா நடந்ததும். தன் செல்பேனை அவசரவசரமா எடுத்து குறிப்பிட்ட நம்பருக்கு அழைப்புவிடுத்து அந்தபக்கம் ஃபோன் எடுத்ததும்.

ரமேஷ் " லேய் மக்கா நம்ம பஸ் ஸ்டாப்ல அனிஷாவ பார்தேன் மக்கா.. நீ எங்க இருக்க சந்துரு மகன் பிறந்தநாளுக்கு வந்திருப்பா போல. அவந்தான் வந்து கூட்டிட்டுப்போனான்.

அந்தபக்கமிருந்து என்ன பதில் வந்திச்சோ. சரி நீயே எல்லாம் பேசி சரிபண்ணிடு. இந்த தடவையும் விட்டுட்டா இனி உனக்கு அவள பாக்குற வாய்ப்புக்கூட கிடைக்காது பார்த்துக்க..

அந்தபக்கமிருந்து " சரி.தேங்கஸ்டா “என பதில் வந்தது.

சந்துருவும் என்ன பங்க்க்ஷனுக்கு கூப்பிட்ருக்கான். என்கிட்டயும் லேசா சொன்னான் அனிஷா வந்தாளும் வருவான்னு நான் பார்த்துக்குறேன் "

ரமேஷ் " என்ன அவளுக்கு அடையாளம் தெரியல. நான்தான் உனக்கு சொன்னேன் சொல்லிடாத..

என்ன கொன்றுவா "

(கல்லூரி நாட்களில் நடந்தது இப்பவரைக்கும் அவனுக்கு ஞாபகமிருக்கு. நம்ம அனிஷா மேக் அப்படி இந்த குட்டிய சமாளிக்க அவனாலதான் முடியும்னு நினச்சிக்கிட்டே தன்னோட கடைக்குள்ள போயிட்டான்).

அனிஷாவும் சந்துருவும் உள்ளே நுழையவும் சந்துருவின் அம்மா பகவதி பார்த்திட்டு அனிஷா கைய பிடிச்சிட்டு

" பிள்ள நல்லாயிருக்கியா ,ஆளு அடையாளந் தெரியாதளவு மாறிட்ட அப்பாவும் அம்மாவும் நல்லாயிருக்காவுலா, இவ்வளவு நாள் கழிச்சி இப்பதான் இந்தபக்கமா வரத்தோணுச்சா "

சந்துரு " எம்மா ,என்னதிது வெளிய நின்னு பேசிக்கிட்டு. வீட்டுக்குள்ளபோயிட்டு பேசுவோம்.

காணமாபோனவ இப்பந்தான் வந்திருக்கா. அப்படியே பேசி பேசி திரும்பி போகவச்சிறாதீங்க " என்று சிரித்துக்கொண்டே சொல்ல.

அனிஷா " அடங்கு ரெம்ப பேசாத. ஏதோ நீ பெரிய சமுகசேவை செய்த எஃபெக்ட் குடுக்காத. நான் நம்பர் மாத்திட்டு போயிருந்தா எப்படி கண்டுபிடிச்சிருப்ப..

நானா நினைச்சாமட்டுந்தான் எதுவும் நடக்கும் ”

சந்துருவின் மனைவி வர்ஷினி வரவும் பேச்சு தடைப்பட்டு வீட்டுக்குள்ள போனதும் குட்டிப்பையன் நேத்ரன் அங்க இருக்கவும் அவனை தூக்கி தன்மடியில் வைத்துக்கொண்டாள் அனிஷா.

ஏற்கனவே அந்தவீடு அவளுக்கு பழக்கப்பட்டதுதான. எந்த பார்மாலிட்டீசும் இல்லாம பேச முடிஞ்சது எல்லாருக்கும்.

பகவதி " உனக்கு காபி எடுத்திட்டு வாரேன். பேசிட்டிருமா லெட்சுமிய கூப்பிடுறேன். கிட்சன்லயிருந்தே லெட்சுமிய கூப்பிடவும்.

மாடியில் இருந்து தன் இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே வந்தாள் சந்துருவின் தங்கை லெட்சுமி. 

லெட்சுமி அனிஷாவ பார்த்ததும் ஒடிவந்து அவளுடைய கையப்பிடித்து

" எப்டிக்கா இருக்கீங்க, எவ்வளவு நாளாச்சி உங்கள பார்த்து.

அண்ணாகிட்ட கேட்டதுக்கு நீங்க புனேல வேலைப்பாக்கறதா சொன்னான். எங்க இரண்டு பேரு கல்யாணத்துக்குமே நீங்க வரல. அண்ணாவோட கல்யாணத்துக்கும் வரலல நீங்க. உங்க காலேஜ் குரூப்லயிருந்து வந்தாங்க தெரியுமா "

மூச்சிவிடாம பேசினாள் லெட்சுமி.

அனிஷாவுக்குத்தான் என்ன பதில் சொல்லனு தெரியல யார்மேலயோ உள்ள கோபத்தில இங்க வராம இருந்திட்டமோ என சிந்தனை .

அதுக்குள்ள காஃபி வரவும் அதையெடுத்து குடிக்குற மாதிரி பேச்சைமாற்றினாள்.

லெட்சுமியை பார்த்து " இவ உன் பொண்ணா.

அழகா இருக்கா என்ன பேருடா "

லெட்சுமி" வித்யா,அண்ணாதான் இந்த பேரு வச்சாங்க"

அனிஷா சந்துருவ பார்த்திட்டே " அப்படியாடா நீயா பெயர்வச்ச. இந்த பெயர எங்கயோ அடிக்கடி கேட்ருக்கனே " நக்கலபார்த்தா.

சந்துரு திருட்டுமுழி முழிக்க.

வர்ஷினிதான் ஒரு மாதிரி பார்க்க பயந்திட்டான் .

சந்துரு " அம்மா தாயே வர்ஷினிக்கிட்ட நீ சும்மதான் கேட்டேனு சொல்லிடு. இல்லனா என்ன கேள்விக்கேட்டே இம்சை பண்ணுவா.

நீ வேற எதையும் பத்த வைக்காதன்னு.

அனிஷா " சரி பொழச்சிப்போ விளையாட்டாதான் கேட்டேன் "

அப்போதுதான் நியாபகம் வந்தவ தன் கைப்பையிலிருந்த இரண்டு நகை டப்பாவ வெளியெடுத்து ஒன்றைத்திறந்து சின்னதாயிருந்த பிரேஸ்லெட்டை எடுத்து நேத்ரனுக்கு போட்டுவிட்டாள். இன்னொன்றை எடுத்து லெட்சுமி கையிலக்குடுத்தாள்.

உன்னோட பாப்பாவ பார்த்ததில்லல அதான் அளவு எதுவும் தெரியல. கம்மல் வாங்கிட்டேன்டா சாரி.

நேத்ரனை நான் ஃபோட்டல பார்த்திருக்கேன் அதனால சரியான அளவுல வாங்க முடிஞ்சது.

லெட்சுமி " அக்கா நீங்க எங்கள பாக்க வந்ததே சந்தோஷம். எதுக்கு கிஃப்ட் எல்லம் " என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சந்துரு கோவமா பார்த்திட்டிருந்தான்.

வர்ஷினி என்னனு கேட்டாள் ஒன்னுமில்லன்னு சொல்லி தலையசைத்தான்.

சந்துரு " இப்பவே எதுக்கு இதெல்லாம் எடுத்து குட்டீஸ்க்குபோட்டுவிடுற. பங்க்க்ஷன் சாயங்காலந்தான்.

நீ நேரமே வந்ததுல எனக்கு சந்தோஷம்.

நீ என்ன பிளான் பண்ணி வந்த அதச்சொல்லு முதல்ல. "

இப்படி கேட்டா என்ன பதில் சொல்ல அனிஷா தயங்கி தயங்கி " அது நான் சீக்கிரமா போகனும் நாகர்கோவில்ல ஒரு வேலையிருக்கு. " தலையை கவிழ்ந்து தன் விரல்களை பார்த்தே பதில் சொன்னாள்.

சந்துரு " பொய் சொல்லாத நீ சாயங்கலாம் வரக்கூடதுன்னு இப்ப வந்திருக்க அப்படித்தான

நீ எப்படி யோசிப்பன்னு எனக்கும் கொஞ்சம் தெரியும்மா. என்கிட்டயே ரீல சுத்தாத"

அனிஷா சந்துருவை ஏறிட்டு பார்த்து 

“ கலக்கத்துடனே சாயங்காலம் நான் இருக்க விரும்பல உன்னோட பாய்ஸ் குரூப்ல எல்லாரும் வருவாங்கதானனு “ சொல்லிட்டு அங்கு பார்க்க வர்ஷினியும் ,லெட்சுமியும் இவங்க பேசுறது பார்த்திட்டுருந்தாங்க. மெல்ல சுதாரித்த அனிஷா சந்துருவ பார்க்க அவனும் புரிஞ்சிக்கிட்டு பேச்சை நிறுத்தினான்.

லெட்சுமி " அக்கா உங்க கேங்க்ல எல்லாரும் வருவாங்கல்ல நீங்களும் இருங்கக்கா. ரெம்ப நள் கழிச்சு வந்திருக்கீங்க. உங்க பிரண்ட்ஸ்லாம் வந்தா செம ஜாலில"

அனிஷா " தெரிலடா இவன் யாரையெல்லாம் கூப்பிட்டிருக்கான்னு தெரியாது.ரியா வர்றதா சொன்னா. வேற யாரும் எனக்கு போன் 

பண்ணலடா "

சந்துரு " அவ கேங்க்ல எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். அப்பறம் அர்ஷாத் வருவான் பக்கத்துல இருந்திட்டு அவன கூப்பிடாம இருக்கமுடியாது. தேவாவும் வருவான். மீதியிருக்குற எல்லாரும் சொந்தம்தான் வந்திருவானுங்க"

அர்ஷாத் பெயரைக்கேட்டதும் அவளுக்கு முகத்துல அவ்வளவு கோவம்.

அவளுக்கு தெரியும் நம்ம வருவோம்னு தான் பிளான் பண்ணி அர்ஷாத்த கூப்பிட்ருக்கான் வேணும்னு.

அனிஷா சந்துருவ கோவத்துல முறைக்கவும் கண்ண காமிச்சி எல்லாரும் இருக்காங்க பிறகு பேசலாம். வந்த கோவத்தை காட்டமுடியாம அமைதியாயிருந்தா.

லெட்சுமி " அக்கா புனே எப்படி போனீங்க. அண்ணாகிட்ட கேட்டுத்தான் நீங்க எங்கயிருக்கீங்கனே தெரிச்சிக்கிட்டேன். அர்ஷாத் அண்ணாலாம் வந்தாங்க. ரியாக்கா,கீர்த்தனாக்கா,ராதாக்கா எல்லாரும் அண்ணா கல்யாணத்திற்கு வந்தாங்க.

அர்ஷாத் அண்ணா நீங்க வரலயான்னு அண்ணங்க்கிட்ட கேட்டுட்டிருந்தாங்க. நீங்க வந்திருந்தா

சூப்பராயிருந்திருக்கும் "

அர்ஷாத் என்ன கேட்டானா. அப்படியானு சந்துருவ பார்க்க .

அவன் லெட்சுமி போயி ஆல்பம் எடுத்திட்டுவா அவா பார்க்கட்டும்னு சொல்லவும்.

அனிஷா " இல்ல இன்னும் கொஞ்சநேரத்துல நான் கிளம்பிடுவேன்.

வேண்டாம் இன்னொரு நாள் வர்றேன் "

சந்துரு " உன்னைய யாரு போகவிடுறா. இருந்து பங்க்க்ஷன் முடிஞ்சதும் எல்லாரையும் பார்த்து பேசிட்டுதான் போற. " என்று கொஞ்சம் அழுத்தமா சொல்லவும்.

அனிஷா அவனை பார்த்த பார்வையிலயே எல்லாமும் தெரிஞ்ச நீயே இருக்க சொல்லற அப்படிங்கற செய்தியிருந்திச்சி.

அனிஷாக்கு ஆயாசமாக இருந்தது .

என்னாடா இது இந்த பக்கி எதோ பிளான் பண்ணிட்டான். பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.

அனிஷா " நான் அம்மாகிட்ட உடனே வந்திடுவேன்னுதான் சொல்லிட்டு வந்தேன்,அம்மா தேடுவாங்க."

பகவதி " அம்மாகிட்ட நான் பேசிக்குறேன். நீ இருந்து பங்க்க்ஷன் முடிஞ்சி வருவான்னு சொல்லிடுறேன்.டேய் சந்துரு இவங்கம்மாக்கபோன் பண்ணு நான் பேசிக்குறேன். இவ்வளவு நாள் கழிச்சி வந்தவ உடனே போகுறதுக்கு நிக்கா ”

இவங்க ஃபோன் பண்ணினா அம்மா ரியக்க்ஷன் பயங்கரமா இருக்குமே.

அனிஷா " நானே அம்மாகிட்ட சொல்லிடுறேன். லேட்டாகும் தம்பிய வந்து கூட்டிட்டுப்போக சொல்லி சொல்றேன் "

உடனே அம்மாவுக்கு அழைத்து செல்லியாகிவிட்டது. மதியமே வந்தாச்சி அவ்வளவு நேரம் இங்க என்ன செய்றதுனு யோசிச்சிக்கும்போதே

சந்துரு " காலேஜ் பக்கந்தான அங்க போயிட்டு வர்றியா. நானும் உன்கூட வர்றேன்"

அனிஷா யோசனையோட " போகலாம் ஆனால்,.சரி நானே நடந்து போயிட்டு வர்றேன் நீ இங்க வேலைய பாரு உனக்கு வேலை அதிகமாயிருக்கும் நான் தனியா நடந்தே போறேன் "

சந்துரு யோசனையாக " நடந்தா ,சரி கவனமா போயிட்டுவா.

அம்மாகிட்ட நான் சொல்லிக்குறேன் நீ மெதுவா போயிட்டுவா. "

அனிஷா மனசே இல்லாம தலையதலையாட்ட.

சந்துரு " என்ன தலையாட்டுறதே சரியில்லேயே.

பேக் இங்க இருக்கட்டும் ஃபோன் மட்டும் கையில் எடுத்துக்கோ. எதுனாலும் எனக்கு கால் பண்ணு ஓகேவா.

அப்படியே வீட்டுக்கு போயிறாலம்னு தான நினைச்ச,பிச்சிருவன் "

அனிஷா " நீ முன்னாடி மாதிரியில்லடா

ரெம்ப அறிவாளியாகிட்டடா. நா நினைக்கிறதெல்லாம் கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுற "

என சொல்லவும் அதைகேட்டுகிட்டே கிட்சன்லயிருந்து வந்த வர்ஷினி சத்தமா சிரித்துவிட்டாள்.

நீ என்ன டேமேஜ்பண்ணது போதும் காலேஜை போயி பார்த்திட்டுவா. என் பொண்டாட்டி முன்னாடியே என்ன கலாய்க்கிற நீ.

அனிஷா சிரிச்சிக்கிட்டே வெளியே இறங்கி மெதுவா நடந்தாள். இந்த வழியா எத்தனை ஆர்ப்பாட்டமா,

எத்தனை நாள் பிரண்ட்ஸோட நடந்து வந்திருக்கோம். இப்போ யாருமேயில்லாமா தனியா மெதுவா நடக்கும்போது கொஞ்சம் ஃபீல் தான் அவளுக்கு.

இவ வெளியே கிளம்பினதும் வர்ஷினிகிட்ட சந்துரு பேசினான்.

இவங்க இரண்டுபேரோட வாழ்க்கைய சரி பண்றதுக்குள்ள என்ன தலைகீழா நிக்கவச்சிருவா போல முடியலடா.

அதற்குள்ள அவனுக்கு ஃபோன் வந்திட்டு

ஃபோனை பார்த்திக்கிட்டே இருந்தான் எடுக்கல.

வர்ஷினி கேட்டாள் ஏன் போன் அட்டண்ட் பண்ணாம பார்த்திட்டு இருக்கீங்க யாரு போன்ல.

சந்துரு " அது அந்த பரதேசிதான் கால் பண்றான் அனிஷா வந்திட்டாளானு கேட்பான். வேறென்ன இவன் சரியாயிருந்தா ஏன் இவ்வளவு பிரச்சனை வரப்போகுது. அன்னைக்கு விட்டுட்டு இன்னைக்கு பிடிக்க முயற்சிப் பண்றான். எல்லாருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு. இவங்க இரண்டுபேரோட வாழ்க்கை சரியாகனும்னு நமக்குத்தான் டென்சன். இதுக இரண்டும் தனித்தனியா நல்லாதான் இருக்குதுக. என்னத்த சொல்ல"

அதற்குள்ளாக அடுத்தமுறை கால் வந்திட்டு எடுத்து பேசியவன் 

" ம்ம் வந்திட்டு இப்பதான் நம்ம காலேஜை பார்க்கனும்னு போறா "

" ஆமா நடந்துதான் போறா "

" எல்லாம் சரி நிதானம். இல்லனா மலையேறிடுவா. நாழு அடிவேணாலும் வாங்கிக்க அவ்வளவுதான். நீ தான் சரி பண்ணனும், இல்லனா உனக்குத்தான் பெரிய நஷ்டம். எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க முடியாது ஏன் எதுக்கு அப்படி என. உன் வாழ்கை மட்டுமில்ல அவ வாழ்க்கையும் உன் கையிலதான் இருக்கு நிதானமா பேசு "

" சாயங்காலம் வந்திரு "

" ம்ம் வைக்கிறேன் "

மெதுவா நடந்து போறவ மனசுக்குள்ள ஏதோ ஒரு ஃபீல்.

திரும்பி திரும்பி பார்த்துகிட்டே போனாள்

"அவ மனசாட்சி கேட்டுது. அவன் மேல கோவமாயிருந்த. இப்போ என்ன வருவானு எதிரபார்க்கற. "

அந்த சாலையில் அவனோடு கைகோர்த்து நடந்த நிமிடங்கள் நியாபகத்திற்கு வந்தன. அது தந்த வலி இன்னும் கோபத்தை தூண்டியுது.

" நான் ஒன்னும் யாரையும் தேடல " சத்தமா சொல்லிக்கிட்டே நடந்தாள்.

எல்லாரும் கிராமத்துலயிருந்து நகரத்திற்கு படிக்கவருவாங்க.

நம்ம எதுக்கு நாகர்கோவில் சிட்டிலயிருந்து இங்க படிக்கவந்தோம். எல்லாம் பிடிவாதம்”

அங்க படிச்சிருந்தா இப்படி யாரோபோல இங்க வந்திருக்க வேண்டாம் அவனையும் பார்த்திருக்க வேண்டாம். நம்ம வாழ்க்கை நிம்மதியா இருந்திருக்கும்.

எதுக்காகவோ எங்கயோ இப்படி வருஷக்கணக்காக தனியா இருந்திருக்கவேண்டாம். அவனை நினைச்சாலே கோவம் கோவம் மட்டுமே.

நான் எதுல குறைஞ்சிபோயிட்டேன் அப்படி அவனுக்கு. அவனை நினைக்கவேகூடாதுன்னு விருவிருன்னு நடந்தாள்.

இதுக்கு நேரெதிரான மனநிலையில்

அவளுக்கு தெரியாது இரு கண்கள் அவளை ரசிச்சிகிட்டே பின்தொடர்ந்தது....             

        அத்தியாயம் - 2

நிதமும் தீயினில்

முக்குளித்து

உயிர்வாழ்கிறேன்

ஆனால்

உன் மூச்சிக்காற்றில்

வெந்து தணிகிறேன்

சருகாய்...

கல்லூரியின் பெரிய கேட் முன்னாடி அங்கே சுத்தியிருக்கும் கொன்றை மரங்கள் அவளுக்கு ரெம்ப பிடிக்கும்.

அதுவும் ஆவணி மாதத்தில் ஓணக்காலத்தில் கொன்றை பூக்கள் மண்ணில் சிதறிய கோலம்தான் கல்லூரி முழுவதும். மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாயிருக்கும்.

மெதுவா உள்ளே நடந்து சென்று அங்கே திண்டின்மேல் அமைதியாக உட்கார்ந்தாள். அவ்வளவு அழகான நிமிடங்கள் அது.

எழுந்து அவளுடைய துறை சார்ந்த கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.

அவள் பின்னாக வந்தவன் அவசரமாக அளிடம் அருகில் செல்ல நினைத்து

சற்று வேக எட்டுகள் வைக்க

திடீரென " எப்படிமா இருக்க " என கேட்க.

சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பியவள் " மணி அண்ணா எப்படியிருக்கீங்க என்ன தெரியுதா உங்களுக்கு " எனக்கேட்டு சிரிக்கவும்

மணி " என்னம்மா இப்படிக் கேட்டுட்ட உன்னோட பேரு ஞாபகமில்லை ஆனால் உங்க ஆறு பேரையும் மறக்கமுடியுமா.

ஆமா எங்க ஒன்னோட வலதுகை வரலயா. தனியா வந்திருக்க "

ரியாவைத்தான் விசாரிக்கறாரு என அவளுக்கும் தெரியும்.

அனிஷா " அவ வரலண்ணா

என்ன அண்ணா கையில புக்ஸ்லாம் தூக்கிட்டு போறீங்க எங்க "

மணி " மோசஸ் சார் பர்ஸ்ட் இயர் கிளாஸ்ல இருக்காரு. எப்பவும்போல எல்லாம் மறந்துபோயிட்டாரு "

அனிஷா வாய்விட்டு சிரிச்சிட்டா 

" இன்னுமா! அப்படியேவா இருக்காரு. அவரு மாறவேயில்லையா.

எந்த கிளாஸ்ல என்ன பாடமெடுக்கிறாருன்னே மறந்திருவாரு இதுல புக்ஸ்சுமா.

அவரு ph.D அறிவ காமிக்க நல்ல ஆடுகள் கிடைச்சிருக்குப்போல பாவம் அந்த பிள்ளைங்க. அவரு கிளாஸ் எடுக்கும்போது மட்டுந்தான் பிள்ளைங்க சேட்டை பண்ணமுடியும் "

மணி " பர்ஸ்ட் இயர் மட்டுந்தான இருக்காங்க. இந்த ஒருவாரமும் இவருதான் கிளாஸ் எடுப்பாரு "

அந்த கல்லூரியில் முன்பே எழுதபடாத சட்டம். முதலாம் ஆண்டு மாணவர்கள் முதன்முதலில் கல்லூரி வரும்போது இரண்டாம், மூன்றாமாண்டு மாணவர்களின் எந்த தொந்தரவும் இருக்ககூடாதென்று அவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விட்டுவிடுவார்கள்.

அந்த ஒருவாரத்திலும் முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரியை நல்ல பழக்கமாக்கி கொள்வார்கள் என்று.

இப்பொழுதும் அது வழக்கத்தில் இருந்தது.

அனிஷா " அங்க யாரெல்லாம் இருக்காங்க " எனக்கேட்டாள்.

இவளே ஒரு பெரிய கல்லூரியில் பேராசிரியர் அவளுக்கு இன்னும் பாடம் சொல்லிக்குடுத்தவங்க மேல மரியாதை கலந்த பயம். அது இயல்பா எல்லாருக்குள்ளும் இருக்குறதுதான்.

மணி " நம்ம HOD ராமகிருஷ்ணன் சார் இருக்காங்க. அர்ஜீன் சார், கீதா மேடம் உள்ளபோம்மா. நான் அந்த மறதி மன்னன் கிட்ட இந்த புக்ஸ்லாம் குடுத்திட்டுவர்றேன். "

அனிஷா" நீங்களுமா மறதிமன்னனு சொல்லுறீங்க "

மணி " நீங்க வச்ச பேரு.இப்பவர்ற ஸ்டுடண்ட்ஸ் கூட அப்படித்தான் சொல்றாங்க "

அனிஷா " எல்லாம் இந்த ரியாவின் கைவண்ணம் பட்டப்பெயர் நல்ல வச்சிருக்கா காரணத்தோடு. "

அங்கு செல்லவும் ராமகிருஷ்ணன் சார் இருந்தாங்க ஒரு தலைசைப்போடு நிறுத்திக்கொண்டார் அவர் எப்பவுமே இப்படித்தான் .

உள்ளேபார்த்தா அர்ஜீன் சார்

இவள பார்த்த உடனே ஆனாருப்பாரு ஜெர்க்.(இந்த வானரப்படைகளானு மைண்ட் வாய்ஸ் சொல்லிருக்கும்).

அவள் பின்னாடி யாராவது வர்றாங்களானு பார்த்தாரு. ஒருத்தரும் இல்லனவுடனே நார்மலாகிட்டாரு.

அவளுக்கு தெரியும் அவரு யாரைத் தேடிருப்பாருன்னு.

அனிஷா அவர் இருக்கைக்கு நேரா நின்று " எப்படி சார் இருக்கீங்க " அவள் இதைகேட்கும்போதே கீதா மேடம் பார்த்தும் அடையாளம் தெரியாத மாதிரியே உட்கார்ந்து இருந்தாங்க.

அனிஷா மனசுக்குள்ள இவங்க இன்னும் இந்த கெத்து மெயின்டெயின் பண்றத விடலபோலிருக்கு. இவங்கலாம் திருந்தவே மாட்டாங்க என அவளும் கண்டுக்காம இருந்திட்டா.

இவங்க கேங்க்ல ரியாவையும் அனிஷாவையும் அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது ஏனோ தெரியாது.

அர்ஜுன்சார் " நால்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க இப்போ என்ன செய்ற " எல்லா விஷயமும் பேசினாங்க.

அவளுக்கு அடுத்து ph.d பண்றதுக்கு என்ன பண்ணலாம் அப்படினு கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டாள் "

அர்ஜுன் சார் " ஆமா உன் இரட்டைபிறவி உன்கூடவரல "( ரியாவதான் )

அனிஷா" வரல சார். நீங்க கேட்டிங்கன்னு

அவள கால் பண்ணி வரச்சொல்லட்டா சார். பக்கத்துலதான் தக்கலையில இருக்கா. "

அர்ஜூன்சார் " இல்ல இல்ல சும்மா கேட்டேன் " இரண்டுபேருமே ஒன்றுபோல சிரித்தார்கள்.

" வாலுங்க இவ்வளவு வளர்ந்தும் இன்னும் சேட்டை குறையல " என சிரிச்சிட்டார். அனிஷா அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வரண்டாவில் நடந்தாள்.

அடுத்தடுத்து வகுப்புகள் காலியாக இருக்க மூன்றாமாண்டு வகுப்பின் பக்கத்தில் போகவும் இவள் இடைப்பிடித்து யாரோ உள்ளிழுக்கவும் பயந்து சத்தமிட வாயதிறக்கும்போது

" சத்தம்போடாத நான்தான் " அவன்.

இது அவனல்லவா. நிமிர்ந்து பார்க்க அவன் அவனேத்தான் யாரை வாழ்க்கையில சந்திக்ககூடாது என்று நினைச்சாளோ அவனேத்தான்.

அர்ஷாத் முன்பைவிட வளர்ந்து திண்மையான முழு ஆண்மகனாய் நின்றிருந்தான்.

ஒரு நிமிடம் அப்படிபே அவனை பார்த்திருந்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவ்வளவு ஆழமான, ரசனையான பார்வை. கொஞ்சம் தன்னை சுதாரித்துக்கொண்டு கையை உதறிவிட்டு வெளியேற முயற்சிக்க.

அவன் அவளை இன்னும் அவனோடு சேர்த்து இறுக்கி. அர்ஷாத் " போகத ப்ளீஸ் எனக்கு உன்கிட்ட பேசனும். சந்துரு வீட்ல வச்சி பேசமுடியாது இங்கயே பேசிடலாம் கெஞ்சினான் "

அனிஷா அவனிடமிருந்து திமிறி வெளியே வர எத்தனிக்க முடியல. இரும்பு பிடியாக இருந்தது.

முன்னாடிலாம் எவ்வளவு மென்மையா இருப்பான். இப்போ இப்படி பிடிச்சிருக்கான் என்னாடாயிது யோசிக்கும்போதே.

அர்ஷாத் " எப்படிடா இருக்க 4 வருஷத்துக்கு மேல் ஆகுதும்மா உன்ன பார்த்து. அவள் கன்னத்தை பிடிக்கவும் அவனது வலதுகையை தட்டிவிட்டாள்.

ஒன்றும் பேசாமல் அவளை பிடித்திருந்த இன்னொரு கையை தீர்க்கமாக பார்த்தாள்.

அதை புரிந்து கொண்டவன் " கையலாம் விட முடியாது இப்போ விட்டா நீ போயிடுவ " கொஞ்சம் நேரம் அமைதியாக கழிந்தது.

அர்ஷாத் " மெதுவாக அவளை நோக்கி இங்கப்பாருடா தெரியாம செய்திட்டேன். மன்னிப்பு கேட்டா சரியாகது என தெரியும். நான் உன் நன்மைக்குத்தான் செய்தேன், நீயாவது நல்லாயிருக்கனும்னு பேசினேன்.

ஆனால் நீ இப்படி இருப்பனு தெரியாது(இந்த வார்த்தைக்கும் சேர்த்து நீ வாங்கிகட்டிக்க போறடா) "

இப்படியே இருந்தா எப்படி. நம்ம வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோகவேண்டாமா.

என்மேல உனக்கு கோபமிருக்கும் " என பேசிக்கொண்டே அவளைப்பார்க்க கண்களின் ஆற்றாமை ஆனாலும் வாய்திறக்காம அப்படியே நின்றாள்.

" என்னோட காரணகாரியங்களை நான் உன்கிட்ட சொல்றேன். நான் வந்து உங்க வீட்ல வந்து பேசுறேன். உங்கப்பாகிட்ட பேசுறேன் எதுவாகயிருந்தாலும் என்கூட வந்திரு நாம அத சரிபண்ணிடலாம் "என பேச.

அவள் உதடுகூட அசையல.

அவனுக்கு தெரியும் அளோட பிடிவாதம்.

முடிவொன்று எடுத்தா அவளின் நிலைப்பாடு எப்படி இருக்குமென்று எல்லாமே தெரியும் . ஆனாலும் இப்பொழுது அசையாமல் நிக்கறவள பார்த்து இன்னும் சஞ்சலப்பட்டான்.

நம்ம பேசறதுக்கு கொஞ்சமாவது எதிர்வினை வரனும் இங்க எதுவுமேயில்லனா என்னப்பண்றது.

சரிசெய்தே ஆகவேண்டிய பிரச்சணை அப்படியே விடமுடியாது.

அவன் மூளைவேகமாக சிந்திக்க.

அவளிடம் இன்னுமாய் நெருங்கி கன்னங்களை கையிலேந்தி " அனிமா இங்கப்பாருடா. " என பேசத்தொடங்கவும்

அவளும் மனுஷித்தான மூளைக்கும் மனசுக்கும் எவ்வளவு வேலிபோட்டு வச்சிருந்தாலும் நம்ம உயிரா நினைச்சவங்கிட்ட தடுமாறத்தான் செய்வோம்.

அவள் அப்படியே உறைந்து நின்றாள் அவள் உடல்மொழி நிருபித்தது அவளது நேசத்தை. ஆம் தன்னையறியாமலே அவனோடு ஒன்றினாள்.

என்ன நடக்குது என அவள் உணரும் முன்னே அவளோட இதழ்களை தன் இதழ்களால் மூடியிருந்தான்.

அர்ஷாத்திற்குத் தெரியும் இவளை யோசிக்கவிட்டா. இரண்டுபேரும் இப்படியே பிரிஞ்சித்தான் இருக்கனும் அதிரடியா செயல்பட்டான்.

அதற்குள்ளாக சுதாரித்தவள் தன் முழு பலத்தினால் அவனைதள்ள . எங்க அசைக்ககூடமுடியல அவன் அவனது உயிரை அவளது இதழ்வழியாக அவளுக்கு கடத்த முயற்சி செய்தான்.

விழிகள் விரிய கைகளை ஆயுதமாக பயண்படுத்த துவங்கினாள்.

நான்கு வருட பிரிவின் வேதனையை தீர்க்க முயன்றானா?

இல்லை இனி நமக்கு கிடைக்காது என்று நினைத்தது திரும்ப வந்ததென விடாமா இருந்தானா தெரியாது.

அவனும் அவனுடைய நேசத்தின் அளவினை சொல்ல விழைந்தான்

இன்னும் அவளை தனக்குள்ளாக பொத்திவைக்க முயன்றான்.

அவளும் சிறிதாக இசைந்தாளோ என நினைக்க தொடங்கும் போதே.

அவளது மனது இடித்தது.

" மானங்கெட்ட மனசு உள்ளவளா நீ.

இவ்வளவு நடந்தபிறகும் அவனுக்கு இசைந்துக்கொடுத்திட்டிருக்க.

அவன் வேண்டாம் வேண்டாம்னு இவ்வளவு நாளும் வைராக்கியம் வச்சது என்னாச்சு. எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டியா "என நினைக்கவும்.

அவ்வளவு பலம் எப்படி வந்ததோ அவனை முற்றிலுமாக தன்னிடமிருந்து பிரித்தெடுத்து தள்ளிவிட்டாள். அப்படியே தரையில் அமர்ந்து அழுதாள்.

இப்படி அவன் வந்து பேசினா அவன் பின்னாடி நீ போயிடுவபோல என மனது சொல்ல இன்னும் அழுகை.

சத்தமில்லாமல் கண்ணீர் மட்டும் வந்தது.

அர்ஷாத் அவளை தூக்கி பெஞ்சில் அமரவைத்துபேசத்தொடங்கினான்.

" சாரிடா சாரி. உன்கிட்டயிருந்து எந்த ரியக்க்ஷனும் இல்ல அதான் நானா நெருங்கி வந்தேன். எந்த இன்டென்ஷனும் இல்லம்மா "

அவளது கரத்தை கையிலெடுத்து மெதுவாக தடவிக்ககொடுத்தான் மென்மையிலும் அதிமென்மையாக.

ஆமா அவளிடம் எப்பவுமே அவன் இப்படித்தான் மென்மையா நடந்துப்பான். அவனுக்கும் சேர்ந்து அவளிடம் முரட்டுத்தனம் இருக்கும்.

இயற்கையாகவே அர்ஷாத் அமைதி,யாரையும் காயப்படுத்தவே மாட்டான். பேச்சிலும் நடத்தையிலும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என கொள்கை உடையவன். எந்த விஷயத்திலும் தெளிவான பார்வையிருக்கும் இயற்கையிலயே மனமுதிர்ச்சி உள்ளவன். அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டான்.

அதற்கு நேரெதிர் அனிஷா பட்டாம்பூச்சி, வெடிப்பேச்சி,எப்போதும் துருதுருன்னு எதையாவது செய்திக்கிட்டு

யோசிக்கிறதன்மை மற்றவங்களைவிட அதிவேகம். அடுத்தவங்க பேசதொடங்குறதுக்கு முன்னாடியே இவ பேசியே முடிச்சிடுவா.எல்லாத்திலயும் அறிவுப்பூர்வமா சிந்திக்கூடியவள்.

இந்த இரண்டும் எதிரெதிர் துருவங்கள் குணத்துல.

அர்ஷாத் " அனிமா இங்கபாருடா எதுவாயிருந்தாலும் வாயத்திறந்து பேசு.

இல்ல நான் பண்ணினதுக்கு நாலு அடியாவது அடி ( உன்னோட வார்த்தை பலிக்கப்போகுதுடா மவனே.இருக்கு உனக்கு). இப்படி அழாத ப்ளீஸ்

அம்மாகிட்ட எல்லாமே பேசி வச்சிருக்கேன். "

இதைக்கேட்டவுடனே தலையைதூக்கி அவனை தீர்க்கமாக பார்த்தாள்.

அர்ஷாத் " சிறிது தயங்கி அதையெல்லாம் அவங்ககிட்ட எப்படி சொல்லமுடியும். உன்னோட மதிப்பு எனக்கு முக்கியம்டா. சில முக்கியமான விஷயம் மட்டும் சொல்லிருக்கேன். "

மனதின் பாரம் தாங்காமல் நீ என்னவேணா பேசு என பெஞ்சில் தலைசாய்த்தாள்.

எப்படி இவகிட்ட என்னைய புரியவைக்கப்போறனோ 

தலைய அழுத்திபிடிச்சிட்டு

அங்கயும் இங்கயும் நடந்தான். ரெம்ப நேரம் இங்கயே இருக்கவும் முடியாது.

திரும்பி பார்த்தான் எழுதற போர்டு அதை பார்த்ததும் " இந்த போர்டு ஞாபகமிருக்கா அனிஷா.

இதுதான் நம்மோளோட வாழ்கையில முக்கியமான ஆளா இருக்கு இப்பவரைக்கும் இல்ல. " என சொல்லவும் அந்த போர்டை தலைய திருப்பி பார்த்து ஒன்றுமே சொல்லவில்லை.

அர்ஷாத் மறுபடியும் அவ பக்கத்துல உட்கார்ந்து " டேய் அனி இங்கபாரு, உன்ன மாதிரி தான எனக்கும் வலிக்கும். நாலு வருஷம் எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும் யோசி. நீ எல்லா காரியத்தையும் தெளிவா யோசிக்கற பொண்ணுதான இப்பவும் என்பக்கம் இருக்கற காரணத்தை நீ யோசி.

என்னோட ஒவ்வொரு விஷயத்திற்கும் உன்னைத்தான தேடியிருப்பேன்.உனக்கு புரியலையா. நீ எனக்கு இல்லனு நான் எவ்வளவு துடிச்சிருப்பேன் ,

உன்ன மாதிரிதான நானும் இரத்தமும் சதையுமான மனுஷன்தான்

எனக்கும் உணர்ச்சினு ஒன்னு இருந்திருக்கும்னு நீ யோசிக்கலையா."

அர்ஷாத் பேசிக்கிட்டே அருகில்அப்படியே மண்டியிட்டு அவளோட கைய எடுத்து தன்நெஞ்சோட சேர்த்துப்பிடித்தான்.

அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி சிவந்து இருந்தது. கோவத்துல சண்டையாவது போட்டா பரவயில்லை. இப்படி இறுகிபோயி உட்கார்ந்து இருக்கா என்ன செய்ய.

திரும்பவும் எங்கயிருந்துதொடங்க. அவனும் அப்படியே அமைதியா இருந்தான். மனதின் சோர்வு அவளின் உடலை தாக்கியதோ என்னவோ அப்படியொரு தோற்றம் ,அவள்அழுதது வேற. அவள பார்த்து இவனுக்கே பரிதாபமா இருந்தது. இப்படி பேசாம அவளால இருக்கவே முடியாது எதுனாலும் படபட பட்டாசுதான் பேசிட்டே இருப்பா.

எதுக்காகவும் அவ்வளவு சீக்கிரம் கண்ணீர் வராது. என்னாலதானே எல்லாம் இப்படி மாறிட்டா. மனதில் தீர்மானம் எடுத்தான் எல்லாத்தையும் சரி பண்ணனும் முடிவெடுத்துவிட்டான்.

அர்ஷாத் போன் எடுத்து கால் பண்ணினான் " சந்துரு நீ இங்க காலேஜ் முன்னாடி வந்து அனிஷாவ கூட்டிட்டுப்பேறியா. நீ வந்தா பரவாயில்லைனு தோணுது சீக்கிரம் வா "

அனிமா எழும்பு வா போகலாம்.

இங்க ரெம்ப நேரம் இருக்கமுடியாது.

காலேஜ் விடுர நேரம் பிரச்சனையாகிடும்.

அவள் கையபிடித்து எழுப்ப எழுந்தவள் அவன் கைப்பிடியிலிருந்து தன் கையை உருவ முயற்ச்சி செய்தாள். அது தெரிந்தும் இன்னும் இறுக்கமா பிடிச்சிகிட்டான்.

" பிளீஸ்டா இன்னும் கொஞ்சநேரம் உன் கையபிடிச்சிட்டுருக்கேன் " என சொல்லும்போதே அவன் கண்கள் கெஞ்சியது அவளிடம். அவளும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

ஆனாலும் அவள் கண்கள் அவனை அளவிடத்தான் செய்தது.

முகத்தின் மென்மையெல்லாம் போய் பெரிய ஆணின் தோற்றம் ,மீசை பெருசா வச்சிருக்கான் முன்னாடி அவனோட தோள் அளவு இருப்பாள். இன்னும் கொஞ்சம் அதிகமா வளர்ந்திருக்கான்.

ஃபோன் வரவும் எடுத்து பேசினான்.

முதல்ல நீ போ சந்துரு வந்திட்டான்.நான் பின்னாடி வர்றேன்.

அவசர அவசரமா வெளியே வந்தவள் கல்லூரிக்கு வெளியே நின்றிருந்தாள்.

சக்தியில்லாதவள் போல மெதுவா நடக்கவும் தன் முன் நின்ற வண்டியை கவனித்தாள்,

சந்துருவ பார்த்ததும் ஒரு அறைவிட்டாப்பாரு கன்னத்தைப்பிடிச்சிட்டு அப்படியே நின்றான் சந்துரு. ஆமா அடி சந்துருக்குத்தான்.

அதற்குள்ளாக பின்னாக ஓடிவந்து நின்றான் அர்ஷாத். இவ அடிச்சதையும் பார்த்திட்டு நின்றான்.

சந்துரு " என்ன எதுக்கு அடிச்ச நீ.

உங்க பிரச்சனைக்கு நான் என்ன பண்ணுவேன் " அர்ஷாத்த பார்த்து முறைச்சான்.

" உன் பிரண்டா உனக்கு செஞ்ச ஹெல்ப்க்குத்தான் இந்த அடி.

அவ பிரண்ட்டா இருந்து யோசிச்சி நடந்திருந்தா என்ன எதுக்கு அடிக்கப்போறா. இந்த அடி நியாயமா உனக்கு விழுந்திருக்கனும் "

அனிஷாவ பார்த்து வண்டில ஏறு போவோம் என்றான்.

அர்ஷாத் பேசவரவும் சந்துரு " இப்ப எதுவும் வேண்டாம்.என்னடா பேசிவைச்ச இப்படி வந்து நிக்குறா அழுதாளா?

நீ எல்லாம் பார்த்துப்பனு விட்டா இப்படியிருக்கா."

அவனுக்குமே அனிஷா இப்படி அழுது முகமெல்லாம் வீங்கி கஷ்டமா இருந்தது.

இதுக்குவேற வீட்ல உள்ளவங்களுக்கு பதில் சொல்லனும்.

அவன்கிட்ட தலையசைத்திட்டு வண்டியெடுத்தான்.

அர்ஷாத் அனிஷாவையே பார்த்திட்டிருந்தான் அவள் திரும்பிக்கூட பார்க்கல.வண்டி செல்லவும் அப்படியே பார்த்து நின்றான் அவள் அவன் கண்களிலிருந்து புள்ளியாக மறையும்வரை.

அவன்தான் அடுத்து என்னனு யோசித்து நின்றான்.

காற்றாக நிற்கிறாள்

எதைக்கொண்டு பிடித்து

நிறுத்துவேன்?

அன்பின் கயிறு கொண்டோ?

               அத்தியாயம் - 3

நான்

முற்றுபுள்ளி வைக்க

நீ

தொடர்கதை ஆக்குவதென்ன?

         வீட்டிற்கு போவதற்கு முன் அந்த திருப்பத்தில் நிறுத்தி. வண்டியில் இருந்து இறங்க சொல்லி.

அருகில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி அவளிடம் கொடுத்தான்.

சந்துரு " மூஞ்சிய கழுவு, உன் மூஞ்சிய பார்த்தா ஏதோ மாதிரி இருக்கு 

அழுதது தெரியுது பாரு. வீட்டுக்குப்போன எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க."

 

அனிஷா தண்ணிய வாங்கி முகம் கழுவி வந்தவள். சந்துருவின் கன்னத்தைப் பார்த்தாள். அவளுக்கே கஷ்டமா இருந்தது.

     

  ஒரு பிள்ளைக்கு தகப்பனா இருக்குறவன். பிரண்ட் அப்படிங்கறதுங்காக நம்மகிட்ட அடிவாங்கிட்டு நிக்கிறான்.

 

  சந்துரு " என்ன பாக்குற அடி ஒன்னும் பலமா விழல. நீ இன்னும் வளறனும்.  

வர்ஷினிக்கிட்ட ட்ரைனிங்க் எடுத்துக்கோ செமயா சொல்லித்தருவா.

கல்யாணம் ஆன புதுசல நான் நிறைய அடி வாங்கிருக்கேன். வேணா அவாகிட்ட கேளு உனக்கும் பிறகு யூஸ் ஆகும் "

 

அனிஷா லேசா சிரித்தவள் " பிராடு..

வர்ஷினி உன்ன அடிச்சாளக்கும், இத நான் நம்பனும்,போடா டேய். வண்டிய எடு வீட்டுக்கு போகலாம். வா அவாகிட்ட போட்டுக்குடுக்குறேன்."

சந்துரு " வீட்ல யாரும் எதாவது கேட்டா நான் பேசிக்கேறேன் சரியா வா."

வீட்டிற்குள் போகவும் பகவதி,வர்ஷினி,

சந்துருவின் அப்பா எல்லாரும் ஹால்லதான் உட்கார்ந்திருந்தாங்க அவங்க கூடவே அனிஷா உட்காரவும்.

  

லெட்சுமிதான் கேட்டாள் " அக்கா அழுதீங்களா கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு."

என்ன? பழைய காலேஜ் ஞாபகமா.

அண்ணன்லா இப்படி பீலானதேயில்ல.

ஒரு நாள் கூட அந்தப்பக்கம் போனதும் இல்ல. "என சொல்லிவிட்டு சிரித்தாள்.

சந்துரு அவன் ரூம்க்கு போகவும் பின்னாடி வர்ஷினி வந்தாள்.

அதுக்குள்ளாக அவன் தலையை பிடித்துக்கொண்டு பெட்ல உட்கார்ந்து இருந்தான்.

வர்ஷினி அவன் பக்கத்துல உட்கார்ந்து

" என்னாச்சி த்தான் "

 

சந்துரு " இவள கூட்டிட்டு போன்னு அர்ஷாத் ஃபோன் பண்ணான்.அங்க போனா நல்ல அழுது முகமெல்லாம் வீங்கி ஓரு மாதிரி வந்து நிக்கா."

வர்ஷினி " என்ன பிரச்சனைனு நமக்கும் சரியா தெரியதுல. அவங்க இரண்டுபேரும் பேசினாதான எல்லாம் தீரும். பேசினா சண்டை வரத்தான் செய்யும் அழுதிருப்பாங்க. "

சந்துரு " பேசினா சண்டை வரும்னு எனக்குத்தெரியாது பாரு. ஏன் 

நம்ம சண்டை பேட்டதேயில்லையா இது வேறப்பா."

வர்ஷினி "அவனையே பார்த்திட்டிருந்தா. உங்களுக்கு அனிஷாவ ரெம்ப பிடிக்குமா."

சந்துரு" என்ன அர்த்தத்துல கேட்க. "

 

அவன் கொஞ்சம் யோசிச்சிட்டு இல்ல அவங்களுக்காக ரெம்ப ஃபீல் பண்றீங்கல அதான் கேட்டேன்.

 

சந்துரு" உன்கிட்ட எப்படி சொல்ல."

ம்ம்ம் எனயோசிச்சான்.

பின்ன பேசத்தொடங்கியவன்.

 காலேஜ் பர்ஸ்ட் டே ..

உள்ளப்போனா முதல் பெஞ்ச்ல இருக்கா. செம க்யூட்டா பக்கத்துல இருக்கறவங்ககிட்ட சிரிச்சி பேசிட்டே.பிரண்ட்லியா பொம்ம மாதிரி.

      தப்பா நினைக்காத சைட்லாம் அடிக்கல. ஒரு நல்ல ஃபீல். நம்ம கிளாஸ் பொண்ணு அப்படின்னு பிரண்டலி ஃபீல்."

 

ஆனால் அதுக்கு அப்புறந்தான் தெரியும் அம்மையாரு பார்க்கத்தான் அப்படி உள்ள ஒரு சொர்னாக்கானு.

அவகிட்ட பேச,பிரண்ட் பிடிக்கவே கிட்டத்தட்ட இரண்டு வருஷமாச்சி.

வர்ஷினி " என்னது ஒரே கிளாஸ்ல இருந்திட்டு பேசவே இரண்டு வருஷமா."

 

சந்துரு ஷாக்க குறை ஷாக்க குறை அவளபத்தி தெரியாம யோசிக்காத.

இந்த அனிஷாவ வச்சி யோசிக்காத இப்ப இருக்க அனிஷவாது கொஞ்சம் நல்லவ. காலேஜ் டேய்ஸ்ல இருந்த அனிஷா ஒரு சொர்னாக்காம்மா 

நீ வேற. " வர்ஷினி சத்தமா சிரிச்சிட்டு,இந்த பேரு அவங்களுக்குத் தெரியுமா.

சந்துரு சொன்னான் தெரியும் தெரியும் இந்த பேரை வச்சதே. தேவாதான் அவள அநியாயத்துக்கு கிண்டல் பண்ணுவான். இரண்டும் அடிதான் வைக்கும். அவனை விரட்டி விரட்டி அடிப்பா.

 

அவங்க பிரண்ட்ஸ் குருப்ல ஆறுபேருமே செம படிப்ஸ். அழகாவும் இருப்பாங்க.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ஆனால் இவளும் ரியாவும் மட்டும் வானரம் சொல்லிட்டு சிரிச்சான்.

  

  நம்மலாம் யாரையாவது பார்த்து வாயபிளந்து அட்மையர் ஆவோம்ல. அப்படி நான் அட்மையர் ஆனதுதான் அனிஷாவ பார்த்து.

 

வர்ஷினி " எல்லாருமே ரெம்ப அழகு. போட்டோஸ்ல பார்திருக்கேன் லெட்சுமி போட்டோ காட்டினா "

ஆமா " அர்ஷாத்லாம் அனிஷாவ லவ் 

பண்றதுக்குகூட வொர்த் கிடையாது "

வர்ஷினி கோவப்பட்டு அர்ஷாத் அண்ணாவும் அழகா இருக்காங்கத்தான. இரண்டுபேருமே நல்ல பொருத்தம் பின்ன ஏன் இப்படி பேசுதீங்க. பிரச்சனை முடிஞ்சி இரண்டுபேரும் சேர்ந்து வாழனும்னு நீங்கதான இவ்வளவு

முயற்சிப்பண்றீங்க. "

  சந்துரு " இப்பவும் அவா சந்தோஷமா இருக்கனும் அதுக்குதான் எல்லா முயற்சியும் பண்றேன். "

வர்ஷினி " அவங்க அர்ஷாத் அண்ணாவ லவ் பண்ணுனது உங்களுக்கு பிடிக்கலையா."

சந்துரு " புரியாம பேசாத. அவளுக்கும் அவ லெவலுக்கும் அர்ஷாத் சரியா இருக்கமாட்டன்னு அன்றைக்கு இருந்த லெவல்ல யோசிச்சேன். நிறைய நாள் அர்ஷாத்கிட்ட இருந்து ஒதுங்கி போயிருக்கேன். "

வர்ஷினிக்கு அவ்வளவு ஆச்சர்யம்.

சந்துருகிட்ட கேட்டாள் பணம் இதெல்லாம் வச்சி எடைபோட்டீங்களானு கேட்டா.

  

சந்துரு சொன்னான் அப்படியில்ல. அவங்க பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கே ஆச்சர்யம். அனிஷா தான் அவனுக்கு எல்லாம். எல்லாக் கதையவும் பின்னாடி ஒரு நாள் சொல்றேன்.அவங்க பழகறதப்பார்த்து அதுக்கு பிறகு எதிர்மறையா யேசிக்கறது விட்டுட்டேன்."

   

   " ஆனால் அந்த ரத்தீஷ் மேலமட்டுந்தான் கொலவெறியாகுது.

அவன் மட்டும் எங்ககூட படிக்காம இருந்திருந்தா இப்படி நிலைமை இவளுக்கு வந்திருக்காது."

வர்ஷினி " உங்க கேங்க்ல ரத்தீஷ்னு இது வரைக்கும் சொன்னதேயில்ல."

  

சந்துரு " அவனை பத்தி பேசக்கூட பிடிக்கலை. கிறுக்கன் அரைப்பைத்தியமா சுத்துறான். அவன் செய்ததுக்கு அவன் இப்படித்தான் இருப்பான். "

    

வர்ஷினி மடில படுத்தான். வர்ஷினி அவன் தலையக் கோதிவிட்டுட்டு இருந்தாள். அமைதியா இருந்தாங்க இரண்டுபேரும் கொஞ்சநேரம். 

சந்துரு " அவளைபத்தியே பேசி உன்ன எரிச்சல் படுத்துறனா? "

வர்ஷினி சொன்னாள் " என்னத்தான் இப்டிக்கேட்டுட்டீங்க. அவங்கள எனக்கு பார்த்தவுடனே பிடிச்சிது. ஒரு அலட்டல் இல்ல இவ்வளவு படிச்சி காலேஜ்ல வேலைப் பாக்குறாங்க. போட்டோல பார்த்தத விட இப்போ ரெம்ப அழகா இருக்ஙாங்க ஆனாலும் பெருமையில்லல. "

சந்துரு " ஆமா பெருமைலாம் அவாகிட்ட கிடையாது. ஆனா ஒரு கெத்து ம்ம்ம் எப்படி சொல்ல நூறு பசங்க இருந்தாலும் அந்த இடத்துல அலட்டாமா இருப்பா. பார்வைக்கூட அலைபாயாது எந்த இடத்துலயும்.எல்லா டிபார்ட்மண்ட்ல இருக்க லெக்ட்சரருக்கும் அவள தெரியும். செம பிரண்டலி."

 " ஆமா என்ன சொன்ன அழகா,

அவங்க ஒருவித அழகுன்னா. நீ வேறவிதமான அழகுடி என கண்ணடிக்க."

வர்ஷினி " என்ன சார்க்கு கொஞ்சூண்டு ரொமான்ஸ் மூடு வருதுபோல."

சந்துரு " வந்தா என்னவாம் வரக்கூடாதா. "

வர்ஷினி " ஆமா ரொமான்ஸ் பண்ற நேரத்தப்பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க மாமனார் ஆள்படையோட பங்க்க்ஷனுக்கு வந்து நிப்பாங்க கிளம்புங்க."

 

சந்துரு எழுந்து பங்க்க்ஷனுக்கு ரெடியாகப்போனான் வர்ஷினியும் வெளியேறினாள்.

அனிஷா " லெட்சுமி நான் கொஞ்சம் பிரஷ்ஷாகனும்டா."

 லெட்சுமி " மேல லாஸ்ட் ரூம்க்கு போங்க கா நீங்க வந்தா அங்கதான் ரெஸ்ட் எடுக்கபோகச்சொன்னான். கடைசில அவனே உங்கள கூட்டிடுவந்துட்டான்.

 

அனிஷா சரியென்று மேலசென்றாள் .

அங்கிருந்த டேபிளில் தலை சாய்த்தவள் அழுததின் விளைவோ என்னவோ தன்னையறியாமல் தூங்கினாள்

கிட்டத்தட்ட ஒரு ஆறுமணி போல வர்ஷினி அவளைப்பார்க்க வந்தவள் மெதுவாக எழுப்பினாள். 

தூங்குனது அவளுக்கு கொஞ்சம் தெளிவாயிருந்தது.

  

 ரெடியாகி கீழே வந்தாள் லெட்சுமிதான் வெளிய போவோம்க்கா. அண்ணி வீட்ல எல்லாரும் வந்திட்டாங்க.

வர்ஷினி குடும்பத்துல நிறைய பேரு வந்திருந்தாங்க. 

    

வெளியபோய் எல்லாரோடவும் உட்கார்ந்தாள். ஆனாலும் தனியா ஒரு ஃபீல் நம்ம குரூப் வந்தா நல்லாயிருக்கும் என நினைக்கவும், அவள் கண்களை பின்னாடி இருந்து யாரோ மூடினாங்க.

    

   ரியாதான் அடிக்கடி இப்படி பண்ணுவா என தோணவும் ரியா என சத்தமா கூப்பிட்டா,கண்ணுல இருந்து கையை எடுத்து அவ பக்கத்துல உட்கார்ந்தாள். ஆமா அனிஷாவோட வலதுகை ரியாதான்.

     ரியா" எப்படி இருக்க எப்போ வந்த."

  அனிஷா " மதியமே வந்திட்டேன்.

உங்களுக்காகதான் வெயிட்டிங்க். ஹே இதுயாரு உன் பையானா க்யூட்டா இருக்கான் உன்னமாதிரியே " பிள்ளையை கையில் வாங்கிக்கொண்டு சேரில் இருந்தாள் "

 பின்னாடி சந்தியா,ராதா,கீர்த்தனா,

பிருந்தா எல்லாரும் வரவும் அரட்டை தனியா ஆரம்பிச்சிட்டாங்க.

    கொஞ்சம்நேரம் கழித்து ரியா மெதுவா அனிஷா தோளை இடிக்கவும் திரும்பி பார்த்தா அங்க தேவாவும் அவனுடன் சேர்ந்து அர்ஷாத்தும் அவங்க அம்மா கவிதாவும் வந்திட்டிருந்தாங்க.

       

 தேவாவும் அர்ஷாத்தும் எப்பவும் ஒட்டிக்கிட்டுத்தான் இருப்பாங்க.

 அவங்க இரண்டுபேரும் இவங்கபக்கமா வந்துதும் நலம் விசாரிப்பு முடித்து அமர்ந்தனர்.

 

   சந்துருவும் வர்ஷினியும் நேத்ரனுடன் கேக் வெட்டி விழா தொடங்கியது.

       

  அர்ஷாத் அனிஷாவ வச்சகண்ணு வாங்காம பார்த்திட்டிருந்தான். கவனமெல்லாம் இவகிட்டதான்.

   

    ரியா மெதுவா அனிஷாகிட்ட உன் வருங்காலம் உன்ன பார்க்குறான் ஓகே.

ஏம்பா உன் மாமியார் அப்படி பாக்குறாங்கன்னு மெதுவா காதுல சொல்லவும். அவளும் திரும்பி பார்த்தாள். கோவமா பார்க்குறாங்களா இல்ல வெறுப்பு பார்வையானு தெரியாது

அனிஷா " தெரில " என தலையசைத்தாள்.

ரியா " யாரு உனக்கு தெரில இத நான் நம்பனும். "

   அனிஷா ஒன்னும் சொல்லல.

மனசுக்குள்ள யோசிச்சா கண்டிப்பா என்கிட்ட பேசுறதுக்குத்தான் வந்திருப்பாங்க என நினைக்கவும். கவிதாவ முதல் தடவை பார்க்கும்போது எப்படி நெகடிவா ஃபீல் பண்ணுனாளோ இப்பவும் அதே மாதிரி தான்.

தன்னுடைய பொம்மைய யாராவது எடுத்துட்டு போயிடுவாங்களோன்னு இறுக்கி பிடிச்சிட்டு ,பயப்படுற குழந்தையின் மனநிலைதான் அனிஷாவுக்கு இப்பொழுது.

           

அனிஷாவுக்கு பக்கத்துல வந்து ஒருத்தன் " என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்க. முன்னாடி எங்ககூட உட்காருங்க வாங்க " எனவும் எல்லாரும் பார்த்தாங்க. ( வர்ஷினியின் பெரியப்பா பையன் .கொஞ்சம் ஆர்வக்கோளாறு அனிஷாவின் பாஷையில்)

   அனிஷா " இல்ல பரவாயில்லை.

இவங்க எல்லாரும் என் பிரண்ட்ஸ்தான் நீங்க போங்க. அவன் பார்வை முழுவதும் அனிஷா மேலதான்.

   தேவா " யாருடா இது இங்க ரிசர்வ் பண்ணவனே தலையால தண்ணிகுடிச்சிட்டு இருக்கான். இது ஏதுடா புதுசா அன்ரிசர்வ்டு. அர்ஷாத்து உனக்கு நிறைய போட்டி வருதேடா."

  அனிஷா தேவாவ கோவமா பார்த்தாள் இதுக்கெல்லாம் அடங்குனா அவன் தேவாயில்லையே.

   

 அந்தநேரம் சந்துரு ஸ்டேஜ்லயிருந்து

இறங்கிவந்தான் இவங்க பக்கமாக.

    சந்துரு " எல்லாரும் போயி சாப்பிட்டு வந்திருங்க ரிலேட்டீவ்ஸ் வர வர கூட்டமாயிடும் நீங்க இப்பவே சாப்பிட்டு வந்து உட்காருங்கப்பா. பிறகு கீர்த்தனாவுக்கு கஷ்டமாயிரும் சரியா." (கீர்த்தனா கர்ப்பமா இருக்கா. இப்போ 7வது மாதம் ).

   தேவா " வாங்கப்பா ரெம்ப பசிக்குது சாப்பிடப்போவோம்."

  சந்தியா " நீ சாப்பாட்டு ஞாபகத்துலயே இரு. "

 

  தேவா " சந்தியாலே எப்படியும் நீயும் சாப்பிட்டுத்தான போவ பிறகு என்ன. வாங்க இப்பவேபோவோம். கீர்த்தனாவப்பாரு வாங்க." எல்லாரையும் இழுத்திட்டு போனான் தேவா.

  பந்தியில எதிர் எதிரா கொஞ்சபேரு உட்காரவும். அனிஷா அமைதியாவே இருந்தாள். தேவா அவளைப்பார்த்து சிரிச்சிட்டேயிருந்தான்.

   ரியா பக்கத்துல அனிஷா உட்கார்ந்திருந்தாள். கீர்த்தனா உள்பக்கம் வரமுடியாது அதனால கடைசியில உட்கார்ந்திருந்தாள்.

 

 ரியா" எதுக்கு லூசுமாதிரி சிரிக்க".

   தேவா பதில் சொல்லாம அனிஷா பக்கத்துல கை காட்டினான். ரியா திரும்பி பார்த்திட்டு சரிதான் எதோ பிளான் நடக்குது அமைதியாகிட்டா.

     

அனிஷா சிந்தனை இங்க இல்ல. அர்ஷாத் அம்மாவ பார்த்ததிலிருந்து கொஞ்சம் சஞ்சலம் மனசுக்குள்ள,

இதையெல்லாம் அவ கவனிக்கல.

   

   சாப்பாடு வரவும் பார்த்தாள் பிரியாணி ,சிக்கன் இப்படியானது இருந்தது. சாப்பிடாம பார்த்திட்டே இருந்தாள்.

  திடீரென தேவா " டேய் அர்ஷாத்து " எனக்கத்தினான். அனிஷா திரும்பிபார்க்கவும் அர்ஷாத் அவ பக்கத்துலதான் உட்கார்ந்திருந்தான்.

    

   அவன் முகத்தை பார்த்திட்டு சாப்பாட பார்க்கவும் அவளுக்கு யோசனை இவன் இலையில எப்படி அசைவம்னு பார்த்திட்டிருக்கும்போதே அர்ஷாத் அதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்திருந்தான்.

     

 அனிஷா சாப்பிடுற அவனைத்தான் வாயத்திறந்து பார்த்திட்டிருந்தா.

   அர்ஷாத் திரும்பி அவளைப்பார்த்து என்னனு புருவம் உயர்த்தவும்.

அவன் இலையைபார்த்தாள் 

புரிந்துகொண்டான்.

   

  அர்ஷாத் " ஒரு மனுஷன இரண்டு விஷயங்கள் மாத்தும் ஒன்னு பசி அதனால எல்லா சாப்பாடும் சாப்பிட பழகிட்டேன்.

    

இன்னொனு நமக்கு பிடிச்சவங்களுக்காக நம்மள மாத்திக்கறது. அதுவும் அவங்களுக்கு பிடிச்சத நம்ம சாப்பிடுறது ." என சொல்லி அவள சாப்பிட சொல்லி சைகை செய்தான்.

      

 அவளுக்குத் தெரியும் அவன் சுத்த சைவம் மட்டுந்தான் சாப்பிடுவான்

முட்டைக்கூட சாப்பிடமாட்டான்.

இவனுக்காகவே தனி சமையல் அவன் வீட்டில். இப்போ என்னனா எல்லாம் சாப்பிடுறான்.

    

 யோசனையோடவே சாப்பிட ஆரம்பித்தாள். அவ இலையில மட்டும் இரண்டு குலாப் ஜாமூன் டப்பா வைக்கவும் நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷினியோட அண்ணன்.

  இதைப்பார்த்த தேவா " பிரதர் இந்த ரிசர்வ்டு பெர்த்தே தான் வேணுமா உங்களுக்கு. வேற எதாவது அன்ரிசர்வ்டு பாருங்களேன்னு சொல்லவும்." எல்லாரும் சத்தமா சிரிக்கவும் அவன் போயிட்டான்.

அனிஷாதான் தண்ணி கிளாஸ் எடுத்து அவன்மேல எறிஞ்சிட்டா.

தேவா " சொர்னாக்கா இப்படி கிளாஸ் துக்கிப்போட்டா எனக்கு எதாவது ஆகி அப்புறம் எவனும் எனக்கு பொண்ணுதரமாட்டான் பார்த்துக்கோ."

அனிஷா " சொர்னாக்கான்னு சொன்ன உன்ன கொன்றுவேண்டா. என அவனை அடிக்க எழும்பவும்." அர்ஷாத் அவ கையபிடிச்சி உட்காறவைத்தான்.

  

அதுக்குள்ள கீர்த்தனா சத்தம்போட்டாள். என்னதிது எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க. இப்பவும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு." எல்லாம் கப்சிப் அமைதி. 

(ஆமா கீர்த்தனா அந்த குரூப்லே ரெம்ப மெட்ச்சூர்டு.இவங்க அதிகமா பண்றாங்கனு தெரிஞ்சா உடனே கண்டிச்சுருவ.)

        

சாப்பிடும்போது அனிஷா இலையில இருந்த இரண்டு குலாப் ஜாமூனையும் அர்ஷாத் எடுத்து வச்சிருந்தான்.

     

    குனிந்து மெதுவா அவா காதுல " அதுதான் கண்ணத்துல இரண்டு குலாப் ஜாமூன் வச்சிருக்கியே போதும். "

என சொல்லி கைகழுவ எழும்பி போயிட்டான்.

 

   இவா மெதுவா சாப்பிட்டு கைகழுவ போகும்போது அர்ஷாத் பின்னாடியே வந்து அவளைப்பிடித்து அவள் வாயில் குலாப் ஜாமுன் தினித்து வைத்தவன்.

        

அவன் குடுத்ததுலாம் நீ சாப்பிடவேண்டாம். இப்பம் நான் தந்தத சாப்பிடு என நின்றான்.

       

அனிஷா மெல்ல கைகழுவி வரவும்

" நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் " என யாரோ சொல்லவும் திரும்பி பார்த்தாள் அர்ஷாத்தின்அம்மா.

தலையை அசைத்தவள் அவர்களோடு தனியே சென்றாள்.

  

     கவிதா அனிஷாவ கொஞ்சநேரம் பார்த்தாங்க மெதுவா

  " என்ன முடிவு பண்ணிருக்க." என கேட்கவும்.

  

அனிஷா " என்ன "

கவிதா " அர்ஷாத் விஷயமா என்ன முடிவு."

அப்படியே பேசாம அமைதியா நின்றாள்.

கவிதா " நான் கேட்டதுக்கு பதில்."

அனிஷா கண்கள் நல்ல கலங்கியிருந்தது கவிதாவோட எதிர்பார்ப்பு இவளுக்குத்தெரியும்.

     

மதியம் அர்ஷாத் பேசினத வச்சி கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்திருந்தாள். 

  

 அனிஷா " நான் என்ன செய்யனும்னு நீங்க நினைக்கறீங்க."

  

  கவிதா " நான் என்ன நினைப்பேன் நீ என் பையனுக்கு வேண்டாம்னுதான் நினைக்கிறேன். உன்னோட முடிவு என்னனுதான் நான் கேட்டேன். அத சொல்லு. "

      

 அனிஷா வாயத்திறந்தாள் பதில் சொல்ல. அதற்குள்ளாக 

" அவா அப்படி எதுவும் சொல்லமாட்டா "

அனிஷாவும் கவிதாவும் திரும்பவும், அங்கே அர்ஷாத் நின்றான்.

கவிதா" என்ன சொன்ன."

 

அர்ஷாத் " அவா என்ன வேண்டம்னு சொல்லமாட்டா.அப்படியே சொன்னாலும் நான்விடமாட்டேன்.

இதுவரைக்கும் பட்ட வேதனை போதும். நீங்க அவள பார்க்க தான வந்தீங்க.பிறகு ஏன் இப்படி காயப்படுத்துதீங்க."

  

அர்ஷாத் " நான் எல்லாத்தையும் சரி பண்ண முயற்சி செய்றேன். நீங்க ஏன் வந்து குழப்பம் செய்றீங்க."

 

கவிதா " அவாதான் உன்மேல வெறுப்பா இருக்காளே.உன் கூடவும் வரமாட்டா."

 

அர்ஷாத்" அதுக்கு."

கவிதா " எனக்கு என் பிள்ள வாழ்க்கை நல்லயிருக்கனும்.தானும் படுக்கமாட்டா தள்ளியும் படுக்க மாட்டானா எப்படி."

அனிஷா " நான் என்ன செய்யனும் ."

கவிதா " முன்னாடி எப்படி கையெழுத்து போட்டியோ அப்படியே இப்பவும் ஒரு கையெழுத்து போடு போதும். என் பையனுக்கு நாங்க வேற பாத்துக்கறோம். "

  

அனிஷா சத்தமா அழ ஆரம்பிச்சிட்டா

அர்ஷாத் ஓடிப்போயி அவளை தன் நெஞ்சோடு சாய்ச்சிகிட்டான்.

      

   அர்ஷாத் அவங்க அம்மாகிட்ட பேசினான். " என்னம்மா இப்படி எங்க இரண்டுபேரையும் காயப்படுத்துதீங்க. நீங்க போங்கநான் வர்றேன். "

    அவங்கம்மா இனி பேசினா ரெம்ப பேசுவாங்க என தெரிந்து போக சொன்னான்.

   அனிஷா இன்னும் தெளியல. அவளுக்கே தெரியல என்ன மனநிலையில இருக்கா என்று.

  அவனுமே அம்மா இவக்கிட்ட இப்படி பேசுவாங்க என எதிர்பார்க்கல.

    

 அனிஷா போன் சத்தம் கேட்கவும்தான் அவள் அவனிடமிருந்து விலகினாள்.

போன் எடுத்து பேசவும் அது அனிஷாவின் தம்பி பிரேம்

" அக்கா எங்கயிருக்க நான் கார்ல உட்கார்ந்திருக்கேன் வெளிய

வர்றியா கா. "

அனிஷா " சரி வெயிட் பண்ணு பேக் எடுத்திட்டு வர்றேன்."

   

    அவள் போக எத்தனிக்க அர்ஷாத்

அவளை இருக்கமா கட்டிப்பிடிச்சிக்கிட்டான்.

 அவன் பிடியிலிருந்தே மெதுவா பேசினாள் " நீயும் அத்...உங்கம்மா நினைச்சமாதிரி ஒரு கையெழுத்துதான அப்படி நினைச்சி என்ன விட்டுட்ட ."

       

அர்ஷாத்க்கு என்ன சொல்ல முடியும் இப்போ எது சொன்னாலும் இன்னும் இவள பாதிக்கும்.

நம்ம வாழ்க்கையில இவள கொண்டுவந்திட்டுத்தான் எல்லாம் பேசனும். இந்த நேரத்துல எது பேசினாலும் தப்பாதான் முடியும் என நினைத்துக்கொண்டான்.

   

அதற்குள்ளாக கவிதா இங்க இருந்து வர்றத பார்த்த தேவா அவசரமா வந்தான். தேவாவுக்கு கவிதா குணம் நல்லாத்தெரியும் அதனால. அவன் நினைச்சமாதிரித்தான் இங்க எல்லாம் நடந்தது.

தேவா வந்ததும் அனிஷா ஓரளவு தெளிவாகி. அவனிடமிருந்து விலகி மெதுவா நடந்தாள்.  

  

தேவாதான் அர்ஷாத்த திட்டித்தீர்த்தான்

நீயேண்ட அவள தனியா அம்மகிட்ட

விட்ட.

 

அர்ஷாத் "ஆமா எல்லாரும் என்மேலயே வந்து சாடுங்க நான் மனுஷனா உங்க யாரு கண்ணுக்கும் தெரியல இல்லயாடா.

உயிர பிடுங்கி எடுக்கற மாதிரி கேட்டுட்டு போறா. "

 

தேவா நினைத்தான் இவனுந்தான் என்ன செய்யமுடியும் எல்லாரையும் பாக்குறான் அவன்தான் அதிகமா காயப்படுறான்.

தேவா" சரி விடு எல்லாம் சரியாகும் "

அர்ஷாத் " வா வேளிய போவோம் அவ தம்பி அவள கூப்பிடவந்திருக்கான். எனக்கு அவன பார்த்து பேசனும். "

இரண்டுபேரும் வெளிய வரவும் அனிஷா சந்துருகிட்ட பேசிட்டிருந்தா.

அதுக்குள்ளக இவங்க இரண்டுபேரும் வெளிய நின்றிருந்த அனிஷாவின் தம்பி பிரேமிடம் சென்று பேசிக்கொண்டிருந்தனர்.

குறிப்பா அர்ஷாத் சிலது கேட்டுக்கொண்டிருந்தான்.

 

   அனிஷா எல்லாரிடமும் விடை பெற்று வெளிய வரவும் இவர்களைப்பார்த்து புருவம் சுருக்கியவள் அருகில் சென்று

 

அனிஷா " பிரேம் போகலாம் ."

பிரேம் " சரிக்கா வா."

காரில் ஏறி உட்க்கார்ந்து அர்ஷாத்த பார்த்திட்டிருந்தாள்.

அர்ஷாத் தலையசைத்தான்.

அவள் போனதும் அப்படியே நின்றிருந்தான்.

தேவா அர்ஷாத் தோளை தட்டவும் தான் உணர்வுக்கு வந்தவன். 

அர்ஷாத் " வந்ததுல இருந்து அவள அழவச்சிட்டே இருந்திருக்கேன்.

யாரையும் காயப்படுத்த நினைச்சதில்ல.

எனக்கு எல்லாமா உயிரா நினைச்சவள வருஷகணக்கா காயப்படுத்திட்டு இருக்கேன். "         

என் உயிர்செடி கருக

அவளின் கண்ணீரை ஊற்றிச்செல்கிறாள்!

               அத்தியாயம் - 4

நீ

இழந்த சொர்க்கத்தை

மீட்க நினைக்கிறாய்.

நானோவென்றால்

மீளாதிருக்கிறேன்...

கார்லயிருந்த அனிஷா தம்பியிடம் பேசினாள் " பிரேம் என்னை அனுமா வீட்ல விட்ரு."

பிரேம்" எதுக்கு. "

அனிஷா " வந்து ஒரு நாள் ஆகிட்டு. நான் இன்னும் அனுமாவ பார்க்கல, போனதடவ பார்க்காம போனதுக்கு வீடியோ கால் போட்டு அழுதாங்க."

பிரேம் " உன்னதான தேடுறாங்க உங்க அனுமா. என்னலாம் தேடுறதேயில்ல."

அனிஷா " உனக்கு ஏன் பொறாமை.என் பெரியம்மா என்ன தேடுறாங்க."

ஆமா சாரதாவும் அனுராதாவும் அக்கா தங்கை. அனுராதா வீட்டுக்காரர் ஆனந்தராஜ். இவங்களுக்கு இரண்டு பையன்கள்.

மூத்தவன் ஜீவானாந்த் டாக்டர். நாகர்கோவில்ல பிரபல ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர். இரண்டாவது ஜெபானந்த் IPS இப்போதைக்கு ஆந்திராவில் வேலை இரண்டு பேருக்குமே அவங்கவங்க வேலைக்குத்தக்க குணம். அவங்க வீட்டிற்குத்தான் செல்கிறாள்.

இரண்டுவீட்டிற்கும் சேர்த்து அனிஷாதான் ஒரே பெண்பிள்ளை.

பிரேம் கார நிறுத்தவும் அனிஷா இறங்கி " நீ உள்ள வரலயா ."

பிரேம் " நான் வரல மோர்னிங்க் எனக்கு டியூட்டி இருக்கு. அப்பா வேற தேடிட்டு இருப்பாங்க " என காரை கிளப்பினான்.

ஜீவா வேலை பார்க்குற அதே ஆஸ்பத்திரியில் பிரேம் ட்ரைனி டாக்டர்.

அனிஷா உள்ளே வீட்டிற்குள்ளே செல்லவும் ஜீவா மகன் குட்டிப்பையன் பிரஜின் ஓடிவந்தான் " அத்தை " என கட்டிக்கொண்டான்.

அனிஷா அவனை தூக்கிவச்சிட்டே உள்ள போகவும் அனுராதா ஓடிவந்து கட்டிப்புடிச்சி " எப்படி பாப்பா இருக்க " என கேட்டு அழுதிட்டாங்க.

அனிஷா " அனும்மா நான் நல்லாயிருக்கேன் ஏன் இப்படி அழறீங்க."

அனுராதா " பின்ன அழாமா என்ன செய்ய ஏன் மக்களே அங்கதான் வேலை பார்க்கனுமா. இங்கயே வந்திரேன். அம்மாகூடயே இரேன்."

அனிஷா கன்னத்தைபிடிச்சி தடவி

எப்படி இருக்கப்பாரு மெலிஞ்சிபோயி.

உங்க அத்தை உன்னை சரியா கவனிக்கமாட்டுக்கா போல. 

" சாப்பிட்டியா வா சாப்பிடலாம்."

" இல்லம்மா நா சாப்ட்டுத்தான் வந்தேன்

ஃபிரஷ்ஷப் பண்ணிட்டு வாரேன்."

ரூம்லபோயி ட்ரஸ் மாத்திட்டு வர்றதுக்குள்ள அனுராதா ஃபோன் பேசிட்டிருந்தாங்க. மெதுவா போய் அவங்க மடியில் படுத்துவிட்டாள்.

பாப்பா வந்திருக்காடா பேசுறியா அவக்கிட்ட ,ஓ சரி ..

அவள பேசச்சொல்றேன்.

பாப்பா நீ அண்ணனுக்கு போன் பண்ணுவியாம்டா.

அனிஷா " இப்பவேவா "(மனசுக்குள்ள சாரதாம்மா என்ன போட்டு குடுத்தாங்களோ விசாரனைய ஆரம்பிச்சிருவாங்க. என்கிட்ட கேள்வி கேக்கவே சித்தியும் மகனும் Ph.D வாங்கிருப்பாங்க போல)

அனிஷா வீடியோ கால் செய்தா அந்தபக்கம் உடனே ஃபோன் எடுக்கப்பட்டது.

ஜெபா " பாப்பா எங்க போயிருந்த ."

அனிஷா " அதுதான் உங்க சாரும்மா எல்லா டீடயிலும் உங்களுக்கு குடுத்திருப்பாங்களே பிறகு ஏன் என்கிட்ட விசாரிக்கீங்க."பதில் காட்டமா வந்திச்சி அவகிட்ட இருந்து.

ஜெபா இத எதிர் பார்க்கல " என்ன பாப்பா கோவம் ரெம்ப வருது ..என்ன தப்பு பண்ண.ம்ம்."

அனிஷா பேசாமல் இருந்தாள். இனி எதாவது பேசினா அதுக்கும் சேர்த்து விசாரிப்பான்.

ஜெபா " உன்ன எதுக்கு புனேக்கு அனுப்பி வச்சோம் ஞாபகமிருக்கா."

அனிஷா " ம்ம் "

" அப்புறமெதுக்கு அங்கபோன.

அந்த பிரண்ட்ஸ் குரூப் உனக்கு தகுந்த மாதிரியில்லனு எவ்வளவு நாள் சொல்றது. பாப்பா இங்கப்பாரு நீ நினைக்கிறது எதுவும் நடக்காது ஞாபகம் வச்சிக்கோ. எத்தன நாள் லீவ் எப்ப ரிடர்ன்."

அனிஷா " நாளைக்கு ஈவ்னிங்க் ஃபிளைட்ல."

ஜெபா " சரி நான் காலையில கால் பண்ணுவேன் ஒரு முக்கியமான விஷயமா ."

கால் கட் பண்ணும்போது " நீ இப்படியே இருக்கனும்னு பிடிவாதம் பிடிச்சா நானும் இப்படியேதானஇருப்பேன்.

உனக்கு அண்ணன் நான் புரியுதா. " சொல்லிட்டு போன் வச்சிட்டான்.

ஓடிப்போய் அனுராதா மடியில திரும்பவும் படுத்திட்டா.

அவங்கதான் அவள் தலையை தடவிக்கொடுத்தார் அப்படியே தூங்கவும் செய்தாள் .

ஆனந்தராஜ் வெளியபோயிட்டு வந்தவரு ஆச்சர்யமா பாப்பா வந்திட்டாளா.

என்னைய பார்க்கமலே தூங்கிட்டா.

அனுராதா " தம்பி சத்தம்போட்டான் 

அதுதான் ."

ராஜ் " அவ என்ன சின்ன பிள்ளையா. சாரதாவும் சின்னவனும் எப்பவும் இவள பேசிட்டே இருக்காங்க .நீ அவன்கிட்ட சொல்லு. பாவம் பிள்ள அங்கயே தனியா இருந்திட்டு வர்றா. அவனுக்கென்ன கோவம். "

அனுராதா வாயில கையவச்சி பிறகு பேசலாம்….

மெதுவா ரூம்லயிருந்து வெளியேறிட்டாங்க.

நல்ல தூக்கத்துல யாரோ அவ பின்பக்கம் சுள்ளுனு அடிக்கவும் எழும்பி ஏன் அனுமா அடிச்சீங்க என கேட்கவும். அங்க சாரதா நின்றிருந்தார் மணிய பார்த்தாள் 10.30. அவசர அவசரமா குளிச்சி ரெடியாகி ஹால்க்கு வந்தவள் பார்த்தா மொத்த குடும்பமும் ஒன்னா உட்கார்ந்திருக்கு.

அண்ணி சுனிதாகிட்ட சைகையில கேட்கவும் ஜீவாதான் பாப்பா எப்படா வந்த என பக்கத்துல உட்காரவச்சிட்டான்.

அனிஷா ஜீவாகிட்ட பேசிட்டிருக்கும்போதே சாரதா அவளுக்கு காபி கொடுத்திட்டு. சாப்பிட்டு முடிஞ்சதும் சேலை கட்டி ரெடியாகிட்டு வா என சொன்னார்.

அனிஷா " ஏன்மா எங்கயாவது போறமா."

சாரதா " நம்ம போகல இங்க வர்றாங்க."

அனிஷா அவங்கப்பாவை பார்க்கவும் அவரும் அவளைத்தான் பார்த்தாரு.

ஆனால் ஒன்னும் சொல்லாம அமைதியா இருந்தாரு அப்பாவோட அமைதியே அவளுக்கு பயத்தை கொடுத்தது.

அனிஷா எழுந்து நேரா கிட்சனுக்கு போயிட்டு அனுராதகிட்ட கேட்டாள்.

அனுராதா " நீ முதல்ல சாப்பிடுடா அப்பறம் நா உனக்கு சொல்றேன்."

அனிஷா சாப்பிட அமர்ந்தாள் ஆனால் சாப்பாடுதான் உள்ள இறங்கல.

போலிஸ்காரன் வேற காலையில எதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னான். அவள பார்த்திட்டிருந்த அனுராதாதான்

 " சாப்டுமா,உனக்கு நல்லதுதான நாங்க செய்வோம். இப்பவே எல்லாரும் கேட்கிறாங்க. என்ன உங்க பிள்ளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வாராங்களா,எப்போ கல்யாணம்னு.

வயசும் ஆகுதுல, அனும்மா சொல்றேன் கேளுடா.

போயி என் ரூம்ல ட்ரஸ்,நகையெல்லாம் எடுத்து வச்சிருக்கேன் போ, போயி ரெடியாகு சரியா."

அனிஷா எழுந்து சென்றாள் ஒன்றுமே சொல்லாமள்.ரெடியாகும்போது பலத்த யோசனையோடுதான் கிளம்பினாள்.

ரெடியாகி வந்தவள் நேராக அவள் அப்பாவிடம் சென்று உங்களுக்கு இது தெரியுமாப்பா என கேட்கவும் .அவர் தலையைத்து சென்றுவிட்டார்.அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

யாரை மலைபோல நம்பி இருந்தாளோ அவரே இப்பொழுது ஒன்றும் சொல்லாமல் அமைதியா இருக்கார்.

என்ன செய்ய என்ன செய்ய மூளை அப்படியே மறத்துதான் போனது.

எல்லாம் இந்த போலிஸ்காரன் வேலையாகத்தான் இருக்கனும் மனசுக்குள் நினைத்தாள்.

சாரதா "அனிஷா இங்கப்பாரு இதுக்கு முன்னாடி வந்த அலையன்ஸ பிடிக்கலனு தட்டிவிட்ட மாதிரி இப்ப வர்றது எதுவும் சொல்லமுடியாது இவங்க உன்ன பிடிச்சிதான் பார்க்க வர்றாங்க புரிஞ்சுதா."

அனிஷா அவங்கம்மாவ திரும்பி பார்த்தவள் " என் விருப்பம் என்னனு யாருக்கும் முக்கியமில்ல அப்படித்தான."

சாரதா " புரியாம பேசாதடா. அப்பா ரெம்ப கவலைப்படுறாங்க. ஒரு பொம்பளை பிள்ளை அதுக்குகூட ஒரு நல்லது பண்ண முடியலன்னா

 எப்படினு. "

அப்படியே அமைதியாகிட்டா ஒன்னும் சொல்லல. ஏற்கனவே என்னாலதான அப்பா இப்படி இருக்காங்க என ஒரு குற்றவுணர்வு. அம்மா சொன்னதும் அமைதியாகிட்டா.

எல்லாரும் அவசரஅவசரமா எல்லாம் ரெடி பண்ணிட்டிருந்தாங்க. வீட்டை சரிபண்ணி ஒதுக்கி வைக்க என.

(அனிஷா மனசுக்குள்ள நடக்காத கல்யாணத்திற்கு எதுக்குமா இந்த அலப்பறை .அனி பேக் டு பார்ம்).

ஜீவா அவ பக்கத்துல வந்து உட்கார்ந்து அவள் தலையை பிடித்து லேசா செல்லமா ஆட்டி " எங்க பாப்பா மண்டையில என்ன ஓடுது யோசனை பலமா இருக்கு. எனக்கு தெரிஞ்சி என் பாப்பா நல்லவிதமா யோசிக்க வாய்ப்பேயில்ல என்னவா இருக்கும்."

அனிஷா " இந்த விசேஷத்தை எப்படி நிறுத்தனு யோசனை ."

ஜீவா " அது நடக்க வாய்ப்பில்லை ."

அனிஷா " ஏன்."

ஜீவா " இந்த இடம் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நல்ல குடும்பம் அப்புறம் பையனும் ஐ.பி.எஸ் தான். மதுரையில தான் வேலை பாக்குறாங்."

அனிஷா திரு திருவென விழித்தாள்

" நான் ஊருக்கு வரும்போதே எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா."

ஜீவா " இல்ல நேத்து நைட்டு தான் ஜெபா சொன்னான் நேத்தைக்கே வர சொல்லிருக்கான் நீதான எங்கயோ பங்க்க்ஷனுக்கு போயிட்டியாம். அதான் இன்னைக்கு வச்சிருக்காங்க."

அனிஷா "ஓ இது அவன் சொன்ன இடமா. அப்போ சாரதாம்மாவ கையில பிடிக்க முடியாது. அந்த மகன் சொன்னா அவங்களுக்கு வேதவாக்குலா. "

ஜீவா " அப்படியில்லடா அந்த தம்பி உன்ன என் கல்யாணத்துல பார்த்திருக்கான். உன்ன ரெம்ப பிடிச்சித்தான் இன்னைக்கு சம்பிரதாயமா வர்றாங்க."

அனிஷா கோவத்துல "டாக்டரு அப்படியே ஓடிப்போயிரு சொல்றாரு டீடயிலு."

ஜீவா " ஏன் பாப்பா உன் கல்யாணம்

எங்க எல்லாருக்கும் எவ்வளவு பெரிய ஆசை நீ ஏன் புரிஞ்சிக்காம நடந்துக்குற.இந்த பையன எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குடா.

பையன் பார்க்க நல்லாயிருக்கான்

சரின்னு சொல்லிருடா. "

அனிஷா ஜீவாவை பார்த்திட்டு "சரிண்ணா"என தலையசைத்தாள்.

மதியம் சாப்பாடு டைம் போல வந்தாங்க. உபசரிப்பு எல்லாம் முடிந்ததும்.

அனுராதா " சுனிதா பாப்பாவ கூட்டிட்டு வா."

அனிஷா எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தாள்.

சுனிதா வரவும் சேர்ந்து ஹாலுக்கு போனாள்.

அங்கபோனதும் ஜெயராஜ் தான் பேசினார் " இது தான் எங்க பொண்ணு அனிஷா. எனச்சொல்லி பக்கத்தில் உட்கார வைத்தார்."

ஜீவா " பாப்பா இரண்டுபேரும் தட்டுலபோயி கொஞ்சம் பேசுங்க "என சொல்லவும் எழுந்து சென்றார்கள்.

அனிஷா எதுவுமே பேசல அவன கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருந்தாதானே பேசறதுக்கு. அவா அவபாட்டுக்கு மொபைல பார்த்திட்டு இருக்கவும்.

அவன் " எக்ஸ்க்யூஸ் மீ கொஞ்சம் போன் பாக்கறதவிட்டு பேசலாமானு கேட்டான்."

அனிஷா நிமிர்ந்து பார்த்தவள் " எஸ் "

அவன் " என் பேரு வில்பர் சாமுவேல். உங்க அண்ணா கல்யாணத்துல உங்கள பார்த்திருக்கேன்.என் டீடயில் உங்க அண்ணா சொல்லிருப்பாங்கதான."

அனிஷா " ம்ம் "

அவன் " என்ன படிச்சிருக்க "

அனிஷா மொத்தமா எங்க படிச்சா என்ன வேலை பாக்குறா என ஒரே மூச்சில் சொல்லி முடிச்சிட்டு. வேற எதுவும் கேள்வி இருக்கா எனக்கேட்கவும் ஐ.பி.எஸ். என்ன பேச என விழித்து நின்றான்.

" ஏன் எல்லாரும் உங்கள பாப்பானு கூப்டறாங்க "

அனிஷா "ச்ச்.ஜீவாண்ணாவுக்கு எனக்கும் வயசு வித்தியாசம் 12 வயசு. அதனால அண்ணா பாப்பா பாப்பானு கூப்பிட்டு அப்படியே எல்லாரும் கூப்பிடுறாங்க".

(வளர்ந்து கெட்டவன். இவன் என்னத்த IPS படிச்சான். ஒரு பொண்ணோட வேண்டாவெறுப்பு ரியாக்க்ஷன் என்னனு கூட தெரில).

" கேள்வி முடிஞ்சுதுன்னா கீழபோகலாமா."

அவன்" என்ன "

அனிஷா கடுப்புல " கீழ போகலாமான்னு கேட்டேன்."

அவன்" ஷ்யூர் " கீழே வந்தவுடன்

அவ அவளோட ரூமுக்குள்ள சென்று படுத்துவிட்டாள்.

எல்லோரும் கிளம்பி சென்று சிறிது நேரத்தில் அனிஷாவின் போன் சத்தம் கேட்டதும் எழும்பி எடுத்தாள்.

ஜெபா " அறிவிருக்கா உனக்கு அவன்கிட்ட எப்படி பிஹேவ் பண்ணிருக்க என பேசியேத் தீர்த்திட்டான். ஃபோன் பக்கத்துல வச்சிட்டு மறுபடியும் படுத்துட்டா.

கொஞ்சநேரங்கழித்து கிளம்பி வெளியே வரவும். ஜெயராஜ்க்கு ஃபோன் வந்துச்சி புது நம்பரா இருக்க யோசனையோட எடுத்து பேசவும் அந்தபக்கம் யாருன்னு சொன்ன உடனே அனிஷாவ ஒரு பார்வை பார்த்தவரு வெளியே சென்று பேச ஆரம்பித்தார்.

அவரு வரும்போது அவ்வளவு கோவம் முகத்துல தெரிஞ்சதும் அனிஷா பயந்தாள் ஏதோ விபரீதம் நடக்கப்போகுது என.

அனிஷா " அனுமா நான் புனேக்கு போகனும். என்னய யாரு திருவனந்தபுரம் கொண்டுவிடுவா கேட்டுச்சொல்லுங்க. “

அனுராதா " என்ன சொல்ற அடுத்தவாரம் உனக்கு பேசிமுடிக்க போறோம். நீ ஊருக்கு போறேனு சொல்ற . “

அனிஷா " என்னது பேசி முடிக்க போறீங்களா என்கிட்ட சொல்லவே இல்ல ;நான் ஈவ்னிங்க் பிளைட் புக் செய்துட்டேன் நான் போகனும்மா "

சாரதா " சின்னவன் எல்லாம் உறப்பிச்சிட்டுத்தான இங்க பார்க்க வரச்சொன்னான். "

அனிஷா ஜீவான்னா சொன்னத சீரியஸ எடுக்காம போயிட்டமோ. என்ன பண்றது என யோசித்தாள்.

அப்பாகிட்ட பேசலாமென போனா அவரு அவசரவசரமா வெளியே கிளம்பிபோயிட்டாரு. யாரு போன்ல பேசினதுன்னு தெரில.

வெளிய யாருமே இல்லாதவள் போல வராண்டால தலைய சாய்த்து உட்கார்ந்திருந்தா.

சாரதா பக்கத்துல உட்கார்ந்து அவளையே பார்த்திட்டிருந்தாங்க.

நல்லாதான இருந்தா எப்படி மாறிப்போயிட்டா(காதல் எல்லாவற்றையும் மாற்றவல்லது என சாரதாகிட்ட யாரு சொல்லிட்டு அடிவாங்குறது). கொஞ்சநேரம் பார்த்திட்டு உள்ள போகவும்.

அனிஷா ஃபோன் அடிச்சது எடுத்து பார்த்திட்டு அவசரவசரமா தட்டுல(மாடியில) போயி தனியா பேசிட்டு வந்தவள் ரெம்ப பதட்டமா இருந்தாள்.

ஜெயராஜ் திரும்பிவரவும்

" அப்பா புனே போகனும்பா நான் போறேன்…."

என கண்ணீர் முட்ட கேட்கவும் 

ஜெயராஜ் " முடியாது இதுவரைக்கும் உன் விருப்பத்திற்கு வளைஞ்சிக்குடுத்தேன் உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சி போச்சி. எனக்கு சத்தியம் பண்ணிக்குடுத்திற்க நியாபகம் இருக்கா."

அனிஷா பதறிப்போயி " எப்படிப்பா முடியும். அப்படிலாம் விட்டு வரமாட்டேன். அது ஒன்னும் கல்லும் மண்ணும் இல்லப்பா ஜீவனுள்ளதுப்பா."

ஜெயாராஜ் " அது எனக்குத்தெரியாது

நீ சரின்னு சொல்லவும் தான் நான் விட்டுவச்சேன். நீ எப்படி யோசிக்கறியோ அப்படித்தான் நான் தகப்பனா யோசிக்கிறேன். "

அனிஷா கையெடுத்துகும்பிட்டு " தயவு செய்து கெஞ்சிக் கேட்கறேன் என்ன விடுங்கப்பா நான் புனே போகனும். என் உயிரே அங்கதான் இருக்குனு உங்களுக்கு தெரிஞ்சும் இப்படி பண்றீங்கப்பா என்ன விட்ருங்கப்பா. “

ஜெயராஜ் அசையவே இல்ல. அப்படியே மாடியிலயே படுத்து அழுதாள் ஆற்றுவார் தேற்றுவார் இல்லாம.

அர்ஷாத் மேல கொஞ்சமா இளகியிருந்த மனது இப்பொழுது பாறையென இறுகியது. அவனாலதான எல்லாம் எல்லாமே.

மெதுவா எழுந்தவள் கீழே வந்து தன் ரூமிற்குள் சென்றாள். மாடியில அப்பாவும் மகளும் பேசியது யாருக்கும் தெரியாது.

சாரதாவும் ஜெயராஜ்,பிரேமும் அவர்கள் வீட்டிற்க்கு செல்லத்தயாராகி வந்தனர்.

சாரதா " நீ அங்க வர்றியா இங்க இருக்கியா. "

அனிஷா " நான் அனும்மா கூடவே இருக்கேன் " என சொல்லவும் ,அவர்கள் கிளம்பி சென்றனர்.

அனிஷா உள்ளே சென்று அவசரமாகபோன் எடுத்து டிக்கட் செக் பண்ணினாள். எல்லாம் முடித்து ஒரு முடிவோட எழுந்தாள்.

தன் முடிவை செயல்படுத்த நள்ளிரவு வரை காத்திருந்தாள்.

                  அத்தியாயம் - 5

தொலைந்தும் தொலையாமலும்

காதலினால்

தன் கூட்டையும்

தொலைத்து நிற்கிறாள்..

திருவனந்தபுரம் டொமஸ்டிக் ஏர்போர்ட்.

மதியம் இரண்டு மணி.

அங்கிருந்த இருக்கையில் ஜெயராஜ்,சாரதா அனுராதாவும் சிறிது இரண்டு இருக்கைகள் தள்ளி அர்ஷாத், ஜீவா அமர்ந்து இருந்தனர்.

2.30 மணிக்கான பிளைட்டில் புனே செல்வதற்காக.

இன்று காலை 7 மணி.

அனுராதா அனிஷாவின் அறைக்கு சென்று அவளை எழுப்புவதற்காக செல்ல. அவள் இல்லாததை பார்த்து வரவர நல்ல பிள்ளையாயிட்டா. நேரமே எழுந்திட்டா போல என நினைத்து வீடு முழுவதுமாக தேடியவர். அனிஷாவை காணவில்லை எனவும் ஆனந்தராஜை எழுப்பினார்.

அனுராதா " என்னங்க பாப்பாவ காணல " என கலக்கத்துடன் சொல்லவும் பதறி எழுந்தவர் ஜெயராஜ்க்கு ஃபோன் செய்து விசாரிக்கவும் அங்கேயும் அவள் செல்லவில்லை என்று தெரிந்ததும் அனுராதா ஓ வென்று சத்தமா அழவே ஆரம்பித்துவிட்டார்.

அனுராதா " எல்லாரும் சேர்ந்து என் பிள்ளைய எங்கயோ காணம போகவச்சிட்டீங்க என சத்தம்போட்டார்."

ஆனந்தராஜ்தான் பதறாதம்மா எதாவது உனக்கு உடம்புக்கு வந்திரபோகுது கொஞ்சம் பொருமையா இரு. பக்கத்துல எங்கயும் போயிருப்பா என சொல்லவும் அனுராதா கொஞ்சம் அமைதியாகினார்.

அதற்குள்ளாக எல்லோரும் பதறி அடிச்சி இங்கு வரவும். சாரதா ஜெபாக்கு போன் பண்ணி சொல்லிவிட்டார்.

" கொஞ்சம் பொருமையா இருங்க. புனேக்கு கால் பண்ணி கேளுங்க வந்திட்டாளான்னு..

இல்லனா நான் அத்தைக்கு ஃபோன் பண்ணி கேட்குறேன். முதல்ல அழாமா இருங்க ஒன்னுமில்லை ."

அவனுக்குமே பயந்தான் இப்போதைய சூழ்நிலையில். நம்ம பயந்தோம்னா குடும்பத்துல எல்லோரும் பதறிருவாங்க.

எல்லாரும் போட்ட சத்தத்துல தூங்கிட்டிருந்த ஜீவாவும் சுனிதாவும் எழும்பி வர விஷயம் அவங்களுக்கு சொல்லப்பட்டது.

ஜீவா " ஏன் அழுது கூப்பாடு போடுறீங்க. பாப்பா புனேக்குத்தான் போயிருக்கா நான் தான் 4 மணி பிளைட்ல ஏத்திவிட்டுட்டு வந்தேன்."

சாரதா கேட்டார் என்னப்பா எங்ககிட்ட சொல்லிருக்க வேண்டியதுதான.

ஜீவா " உங்க எல்லாருகிட்டயும் பேசனும்னு இருந்தேன் சாருமா. அதுக்குள்ள அம்மா கலவரம் பண்ணிட்டாங்க. அழுகைய நிறுத்துங்க அவா சேஃப் தான். உங்ககிட்ட சொல்லாக்கூடதுன்னுதான் கோவத்துல இருந்தேன். சொல்லாம இருந்தாலும் தெரிஞ்சிப்பீங்க. எப்படியும் அத்தை கால் பண்ணி சொல்லத்தான் போறாங்க."

சாரதா " ஏன் மக்களே அப்படி சொல்ற.நேத்து அவகிட்ட சொல்லிட்டுத்தான போனோம். கல்யாண விஷயம் எல்லாம். அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு."

ஜீவா " சாரும்மா நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்களா. அவ சின்ன பிள்ளையில்லை அவ மனசுல என்னயிருக்குனு யாரவது கேட்டீங்களா.

அலையன்ஸ் வருது அவள வரச்சொல்றோம் அவ பிடிக்கலைனு சொல்லிட்டு போயிட்டே இருக்கா. அதுல நம்மதான் எங்கயோ தப்பு பண்றோம்."

ஆனந்தராஜ்" நீ என்ன சொல்ல வர்ற நம்மதான் அவள கஷ்டப்படுத்துறமா. 28 வயசாகுது இப்பம் கல்யாணம் பண்ணாம எப்படி."

ஜீவா " கல்யாணமே பிரச்சனையோனு எனக்குத்தோணுது. நேத்து பாப்பாவ பார்த்த நிலைமைக்கு இங்க இருக்க எல்லாரு மேலயும் எனக்கு கோவந்தான் வருது "

அனுராதா " என்னடா சொல்ற "

ஜீவா நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

நேற்றிரவு மணி12.30 .

அனிஷா மெதுவாக எழுந்து தன் பேக் மட்டும் எடுத்துக்கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தவள் எல்லோரும் தூங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தவள் கேட் திறக்கபார்க்க திறக்கவில்லை.

அய்யோ கேட் சாவி அனும்மாகிட்டலா இருக்கும். என்ன செய்ய யோசித்தவள் சக்கை( பலாபழம்) பறிக்கதுக்குனு மரத்துல சாத்திவச்சிருந்த குட்டி ஏணியை எடுத்து மதில்மேல ஏறினாள். ஏறி அந்தப்பக்கம் குதிக்கும்போது கையில் எதோ கிழித்தது அதுகூட அவள் சிந்தையில் வரவில்லை.

தெருப்பக்கமா குதித்தவள் அப்படியே

அதிர்ச்சியாகி நின்றாள். அப்பொழுதுதான் அந்ததெருவின் முனையில் திரும்பிய காரின் முன்பக்க வெளிச்சத்தில் இவள் நின்றது அப்பட்டமாக தெரிந்தது. அருகில் வரும்போதுதான் பார்த்தாள் அது அவர்கள் வீட்டு வண்டிதான்.

அருகில் வந்து காரை நிறுத்தியவன்.

என்ன பாப்பா நீ எப்படி இந்த நேரத்துல வெளிய நீக்குற. ஆம் ஜீவாதான் ஒரு முக்கியமான ஆப்ரேஷனுக்காக போனவன் ஆஸ்பத்திரியில இருந்து இப்பொழுதுதான் திரும்பி வர்றான்.

அனிஷா பதில் ஒன்றுமே சொல்லாமல் தலையகுனிந்து அமைதியாக நின்றாள்.

ஜீவா " கார்ல ஏறு பாப்பா நீ எங்கபோகனுமோ அங்க நான் கொண்டுவிடுறேன். அனிஷா வரவில்லை என தலையசைத்தாள்.

" உனக்கு இந்த அண்ணன் அவ்வளவுதான் அப்படித்தான.ம்ம் " அதற்கும் இல்லையென குனிந்து தலையசைத்தாள்.

ஜீவா " அப்போ கார்ல ஏறு."

அனிஷா காரில் ஏறி உட்காரவும் உள் வெளிச்சத்தில் பார்த்தான்.

ஜீவா " என்ன பாப்பா இது கையைப்பிடித்து கேட்கவும் தான் பார்த்தாள் புறங்கையில் எதோ மரக்கிளையோ மதில் சுவரின் கம்பியோ எதோ கிழித்திருந்தது. காயம் கொஞ்சம் பெருசுதான் இரத்தம் வழிந்தது. "

ஜீவா படபடவென டேஷ்போர்டு திறந்து இருந்த மெடிக்கல் கிட் எடுத்து

தங்கைக்கு மருந்திட்டுக்

கொண்டிருந்தான்அவன் கண்களில் கண்ணீர். மருத்துவராக இருந்தும் தன் தங்கையென வரும்போது பதறத்தான் செய்தது. இப்போழுதுதான் அனிஷா வலியினை உணர்ந்த்தாள்.

மருந்து போட்டுவிட்டு காரை கிளப்பினான்.

ஜீவா அவனுடைய எண்ணமெல்லாம் வீட்டு செவர் தாண்டி போகுறளவுக்கா நாங்க எல்லாரும் நடந்துக்குறோம். அதுவும் இவ்வளவு இரத்தம் வருது அதக்கூட அவ கவனிக்கலைன்னா எப்படி உணருகின்றான் என அவனுக்கே தெரியலை.

" எங்க போகனும் "

அனிஷா " திருவனந்தபுரம் ஏர்போர்ட் "

ஒன்றரை மணி நேரப்பயணம் அமைதியாகவே கழிந்தது. இருவரும் இறங்கி உள்ளே சென்று

அமர்ந்திருந்தனர்.

4 மணி பிளைட் இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது.

ஜீவா " நாங்க யாரும் சரியில்ல அப்படித்தான பாப்பா. "

அனிஷா " என்ன ணா இப்படி கேட்கறீங்க "

ஜீவா " நாங்க சரியா இருந்திருந்தா உன்ன செவர் ஏறி குதிச்சி காயப்படுறளவுக்கு வராம, எங்க யாருகிட்டயாவது மனசுவிட்டு பேசிருப்பல்ல. நான் ஏன் எல்லாரையும் சொல்றேன் ,நானே உன்கிட்ட அன்பா இல்ல போல . இல்லனா என்கிட்டயாவது வந்து பேசிருப்பல்ல.எங்க பாப்பாவ நாங்க நல்ல பார்த்துக்குறோம்னு நினைச்சிருந்தேன்டா..

ஆனால் இப்போதான் தெரியுது அப்படி இல்லையென. "

அனிஷா சேர்லயிருந்து இறங்கி ஜீவா முன்னாடி மண்டியிட்டு அவன் கையை பிடித்து " அண்ணா அப்படிலாம் ஒன்னுமில்ல நான்தான் சரியில்லன்னா.

ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் ணா.

என் குடும்பத்தவிட்டு இப்படிதள்ளிப்

போவேன்னு நினைக்கல. இப்பவும் 

இந்த கல்யாணம் வேண்டாம்னு போறேன் உங்களவிட்டு இல்ல ."

" இவனமட்டுமில்ல யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன். அப்படியே நீங்க கட்டயபடுத்தி கல்யாணம் வைச்சாலும் அது நிலைக்காது. இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்லமுடியும் என சொல்லி " அவன் மடியில தலைவைத்தாள் .

கொஞ்சநேரம் இருந்து அவள் போனபின் கிளம்பி வீட்டிற்கு வந்தான்.

வீடுவந்து சேர 6 மணியாகிட்டு.

சுனிதா கேட்டாள் நேத்து இராத்திரியே வருவேன் சொன்னீங்க இப்பம் வர்றீங்க.

" கொஞ்சம் எமர்ஜென்ஸிமா நான் தூங்குறேன் எழுப்பாத ".

இதுதான் நடந்தது என ஜீவா கூறவும்.

ஜீவா " சாரும்மா ஏன் எப்பவும் அவள பேசிட்டேயிருந்தீங்க(திட்டறது). "

சாரதா " யாரவது சும்மா பேசுவாங்களா. நம்ம கொஞ்சம் இறுக்கமா இருந்தாதான் அவ கல்யாணத்துக்கு சம்மதிப்பானு நினச்சேன். இப்படி பண்ணுவானு யாருக்குத் தெரியும்."

அதுக்குள்ள ஜெயராஜ் ஃபோன் அடிக்கவும் எடுத்து பேசினவர் " சரி நாங்க கிளம்பி வர்றோம். நீ நாங்க வர்றத அவாகிட்ட சொல்லாத. நீ அவங்கள கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ."

ஆனந்தராஜ் " யாருப்பா ஃபோன்ல "

ஜெயராஜ் " அக்கா,அவா எல்லாத்தையும் பேக் பண்றாளாம். காலேஜ்ல ரிசைன் பண்ணிட்டு வேற எங்கயோ போகப்போறாளாம். "

அனுராதாவும் சாரதாவும் ஐயோ எங்க பிள்ளைக்கு என்னவோ ஆகிப்போச்சினு மறுபடியும் அழ அரம்பிச்சிட்டாங்க வாங்க இப்பவே அங்க போவோம். என கிளம்புவதுற்கு சென்றார்கள்.

ஜீவா " அவா பேசறத பார்த்தா அவ யாரையோ விரும்பிருக்கனும். எதுவும் பிரச்சனைனு நினைக்கிறேன். "

எனக்கு ஜெய்ப்பா,தம்பிமேலயும் தான் சந்தேகம் இவங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.

ஜெய்ராஜ் ஆமாம் என் தலையசைத்தார்.

ஜீவா கேட்டான் எப்போதிருந்து. அவர் அவ இங்க காலேஜ் படிக்கும்போதே.

ஜீவா " கிட்டத்தட்ட ஏழு வருஷமாவா. அதுக்காகத்தான் அவள புனேக்கு படிக்க அனுப்பினீங்களா. அப்புறம் எதுக்குப்பா அவளுக்கு வேற அலையன்ஸ் பார்த்தீங்க.

இல்லயில்ல இதுல வேற எதோ இருக்கு. அந்த பையன உங்களுக்குத் தெரியுமா. "

எல்லாத்துக்கும் தலையத்தலைய ஆட்டினார் ஜெயராஜ்.

ஜீவாக்கு என்ன செய்யனுத் தெரியலபக்கத்துல இருந்த கண்ணாடி கிளாஸ்ஸ தூக்கி எறிஞ்சிட்டான். அது நேரா டீவில பட்டு உடைஞ்சது கூட சேர்த்து ஒன்றரை லட்சருபாய் டீவியும் நொருங்கியது.

எல்லாருக்கும் அதிர்ச்சி உள்ளேயிருந்த பெண்கள் ஓடிவந்து பார்க்கவும் ஜீவா அவ்வளவு கோவத்துல நின்றான்.

எதாவது பிடிக்கலைனா அழுத்தமா சொல்வானே தவிர அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது.

(சாது மிரண்டால் காடு கொள்ளாது).

அவனுக்கு கோவம் என்னனா ஏழு வருஷமா தெரிஞ்சும் அத சரி செய்யாம

இவங்க அவள ஒவ்வொரு தடவையும்

வதைச்சிட்டிருந்திருக்காங்க அப்படியென யோசிக்குமாபோதே தலையில கைய வச்சிட்டு உட்கார்ந்திட்டான்.

ஜீவா " பாவம்மா அவா அநாதை மாதிரி ஒத்தையில அழுதிட்டே போனாம்மா."

ஆனந்தராஜ் " எப்பா ஜெய் என்ன வேணும்னேவா பண்ணிருப்பான். எல்லாம் விசாரிக்காமலா இருப்பான்."

ஜெயராஜ் " அவங்க குடும்பம் கொஞ்சம் நமக்கு ஒத்துவராது. அப்புறம் ஒரளவுதான் வசதிவாய்ப்பு இருக்கும். அது வேற சமூகம் எல்லாம் பிரச்சனைதான் வரும்.அதுனாலதான்." என இழுக்கவும்.

ஜீவா " அதனால? என்ன அதனால பையன் நல்ல பையனாதான் இருந்திருப்பான் பாப்பா அவ்வளவு சீக்கிரம் சும்ம கண்டவனையும் நேசிச்சிருக்கமாட்டா. எனக்கு பாப்பாவ பத்தி நல்லாத் தெரியும். அந்த பையனுக்கு கல்யாணம் ஆகிட்டா."

ஜெய் " இல்ல "

ஜீவா " ப்பா நீங்க சம்பாதிக்கறதுல பாப்பாக்குலாம் பங்கு குடுக்கமாட்டீங்களா."

ஆனந்தராஜ் " பைத்தியமாடா நீ எல்லாம் தெரிஞ்சி இப்படி கேக்குற நாழு பேருக்கும் சேர்த்துதானடா எல்லாம் வாங்குறேன்."

சாரதா " ஏன் தம்பி நம்ம பிள்ளைக்கு என்ன சேர்த்து வச்சிருக்கோம்னு உனக்கு தெரியாதாடா."

ஜீவா " கேட்காம என்ன செய்வேன். அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி குடுத்திருவோம்மா. பாவம்மா பாப்பா நம்ம கூட இருக்கும்போது வசதி வாய்ப்பு இல்லனாலும்,இவ்வளவு சேர்த்து வச்சிருக்கோம்,வசதிதான் பிரச்சனைனா நம்ம பாப்பாவ நம்மலே பார்த்துக்கலாம்மா."

அந்தப் பையன் பேரென்ன?.

எங்க இருக்கான்?

என்ன படிச்சிருக்கான்?

எல்ல தகவலும் தாங்க.

ஜெயராஜ் "அவன் பேரு அர்ஷாத்.எம்.ஈ முடிச்சிருக்கான். பாப்பா கூடத்தான் பி.ஈ படிச்சான் இப்போதைக்கு தகப்பன் இல்ல."

பிரேம் " ப்பா அந்த அண்ணாவத்தான் நேத்து பங்க்க்ஷன் வீட்ல பார்த்தேன். உங்க நம்பர் கேட்டாங்க குடுத்தேன்."

" அண்ணா அவங்க சூப்பரா இருக்காங்கண்ணா. அக்காக்கு நல்ல மேட்ச். உங்களமாதிரியே ரெம்ப சாஃப்ட் அண்ணா. நேத்து அவங்ககூட பேசும்போது எனக்கு உங்க ஞபகம்தான் வந்திச்சிண்ணா."

ஜீவா " என்ன உன்கிட்ட அப்பா நம்பர் வாங்கினானா அப்போ கண்டிப்பா ஜெய்ப்பா கிட்ட பேசிருப்பான்."

ஜெயராஜ் " ஆமா நேத்து மாப்பிள்ளை வீடடுக்காரங்க வந்திட்டு போனதுக்கப்புறம் வந்த கால் அவன்தான் பேசினான்."

ஜெயராஜ் என்ன நடந்தது என்று சொன்னார்.

தெரியாத நம்பர்ல இருந்து அழைப்பு வரவும் யோசனையோடே எடுத்து பேசவும்.

அந்தப்பக்கமிருந்து " ஜெயராஜ் அவங்க இருக்காங்களா அனிஷாவோட அப்பா."

நான் ஜெயராஜ் தான் பேசுறேன் நீங்க யாருங்க.

" நான் உங்க மருமகன் அர்ஷாத் பேசுறேன். ஞாபகம் இருக்கும்னு நினைக்குறேன். நான் உங்க கூட கொஞ்சம் பேசனும் ,எங்க பார்க்க வரனும்.”

ஜெயராஜ் " அப்படிலாம் உன் இஷ்டத்துக்கு வரமுடியாது. முதல்ல நான் எதுக்கு உன்ன பார்க்கனும் வரமுடியாது."

அர்ஷாத் " சரி நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து பேசுறேன் எனக்கு ஒன்னும் இல்ல. என் பொண்டாட்டி வீட்டுக்கு நான் வந்திட்டுப்போறேன் இதுல என்ன இருக்கு."

ஜெயராஜ் " ராஸ்கல் என்ன எல்லாம் மறந்திட்டோ.ரெம்ப பேசுற."

அர்ஷாத் " ஒன்னுமே மறக்கல அதனாலதான் இங்க வந்திருக்கேன் ."

ஜெயராஜ் " ஒரு ஹேட்டலின் பெயரைச் செல்லி அங்க வா. இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்." என்றார்

அர்ஷாத் " சரி "

இதனால்தான் பேசி முடித்து உள்ளே வந்தவர் அனிஷாவைப்பார்த்து கோவமாக முறைத்தார்.

சிறிது நேரங்கழித்து இருவரும் ஹோட்டலில் சந்தித்தனர். அர்ஷாத்கூட தேவா இருந்தான்.

ஜெயாராஜ் ஜெபாவிற்கு ஃபோனில் எல்லாத் தகவலும் சொல்லியிருந்தார்.

பையன் போலிஸ்ல இருக்கறதுனால அவருக்கு கொஞ்சம் தெனாவட்டுதான்.

" அவர்தான் பேசத்தொடங்கினார்.

என்ன?அப்போ ஓடிப்போயிட்டு இத்தன வருஷம் கழிச்சி வந்து பிரச்சனை பண்றதுக்கு வந்திருக்கியா. "என சத்தம்போட.

அர்ஷாத் " நான் பிரச்சனை பண்ண வரல சார் எனக்கு உங்ககிட்ட பேசனும் ,அதுதான் வந்தேன்."

ஜெயராஜ் " அவளுக்கு கல்யாணம் பேசியாச்சி முடிவாகிட்டு. இப்போ நீ என்ன நினைச்சாலும் நடக்காது. "

அர்ஷாத் " அப்படியா, இதுக்கு அனிஷா சம்மதிச்சா நான் விலகிப்போயிடுறேன். அதவிட முக்கியமானது ஒன்னு இருக்கு. அதெப்படி என் மனைவிக்கு நீங்க கல்யாணம் பண்ண முடியும்."

ஜெயராஜ் " என்னடா கிறுக்கு மாதிரி உளறுர. "

அர்ஷாத் " தன் கையோடு கொண்டுவந்த ஒரு ஜெராக்ஸ் பேப்பர எடுத்து அவரிடம் கொடுத்தான்."

அதைப்பார்த்ததும் மிரண்டுப்போயிட்டார்." இது எப்ப நடந்தது."

அர்ஷாத் " தியதி பாருங்க எல்லாம் புரியும் நீங்க சொன்னதுக்காகவெல்லாம் நான் அவளவிட்டு போகல. அப்படி விட்டுட்டு போனா நான் ஆம்பிளையே இல்ல.

நான் விலகிப்போனதுக்கு காரணம் அனிஷா வாழ்க்கையாவது நல்லாயிருக்கனும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக மட்டும்தான். அதற்கான காரணத்தை உங்ககிட்ட நான் விளக்கவேண்டிய அவசியம் இல்ல . என் பொண்டாட்டிக்கிட்ட நான் விளக்கம் சொல்லிக்குறேன் ."

ஜெயராஜ் " இப்பவும் எங்க பிள்ளைய எப்படி மாத்தனும்னு எங்களுக்கு தெரியும். நீ உன் வழியை பார்த்திட்டுப்போ "

அர்ஷாத் " முறைப்படி தான் என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டு போனேன். அப்பவே நான் போலிஸ்ல கம்ப்ளயிண்ட் குடுத்திருந்தா இப்போ அவ என் கூட இருந்திருப்பா. "

" நாங்க இரண்டுபேருமே உங்கள காயப்படுத்தாம ,எங்க வாழ்க்கைய உங்க எல்லாருடைய சம்மதத்தோடு ஆரம்பிக்கனும்னு இருந்தோம். அதெல்லாத்தையும் மாத்துனது நீங்களும் உங்க மகனும்தான்.இதோட ஒரு காப்பி அனிஷாகிட்டயும் இருக்கு. வேணும்னா கேட்டுப்பாருங்க. "

ஜெயராஜ் " கை வளறுதா கால் வளறுதான்னு பார்த்து பார்த்து வளர்க்குறது நாங்க இப்படி காதல்,கல்யாணம் சொல்லி எங்க பிள்ளைய எங்ககிட்டயிருந்து பிரிக்க வந்தவன்தான் நீ. "

அவர் குரல் உடைந்திருந்தது. மனுஷர் எதுவும்பேசாம எழுந்து நடந்தார். அவர் கையில் அர்ஷாத் கொடுத்த அந்த பேப்பர் இருந்தது.

இப்போது அந்த பேப்பரை வெளிய எடுத்து ஜீவாக்கிட்ட கொடுத்தார்.

அத பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அது அர்ஷாத்- அனிஷா ரெஜிஷ்டர் மேரஜ் பண்ணினதுக்கான சர்டிஃபிகேட்டோட நகல்.ந ம்ம பாப்பாவா யாருக்கும் தெரியாம கல்யாணம் அதுவும் பதிவு திருமணம் எல்லோருக்கும் அதிர்ச்சி.